தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
iffi banner
0 5

'ஹனு-மன்:' ஒரு புராண நாயகர் இந்திய திரைப்படக் காட்சிப் பிரிவில் தோன்றினார்


அர்த்தமுள்ள கதைகளை வழங்குவது குறிக்கோள் மட்டுமல்ல- பொறுப்பும் கூட: தேஜா சஜ்ஜா

 

கோவாவில் நடைபெற்று வரும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய திரைப்படக் காட்சிப் பிரிவில் (இந்தியன் பனோரமா) பிரசாந்த் வர்மா இயக்கிய ஹனு-மன் (Hanu-Man) திரைப்படம் காட்சிப்படுத்தப்பட்டது. இந்த படம், ஹனுமனின் ரத்தத்தின் புதைபடிவ துளியிலிருந்து தெய்வீக சக்திகளைப் பெறும் ஒரு நபரான ஹனுமந்துவின் பயணத்தை விவரிக்கிறது.

ஹனுமந்து என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் தேஜா சஜ்ஜா, இந்திய புராணங்களில் வேரூன்றிய ஒரு கதையை முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பை பிரதிபலித்துள்ளார். தயாரிப்பு பற்றி பேசிய அவர்,பட்ஜெட் கட்டுப்பாடுகளை குழு எவ்வாறு சமாளித்தது என்பதை எடுத்துரைத்தார். அழகிய, கற்பனையான கிராமமான அஞ்சனாத்ரி ஹைதராபாத்தில் ஒரு செட்டில் முழுமையாக மீண்டும் உருவாக்கப்பட்டது என அவர் கூறினார்.

படத்தின் பின்னணியில் உள்ள படைப்பு பார்வையையும் சஜ்ஜா விளக்கினார். இயக்குனர் பிரசாந்த் வர்மாவின் மூன்று வருட பயணத்தில் அவரது விடாமுயற்சியையும் ஆர்வத்தையும் பாராட்டினார். இந்த படம் இந்தியாவின் புராண வேர்களை மீண்டும் கொண்டு வருவது மட்டுமல்லாமல், இந்திய சினிமாவை உலகளாவிய மேடையில் எவ்வாறு நிலைநிறுத்துகிறது என்பதையும் அவர் எடுத்துரைத்தார்.

ஹனு-மன் கலாச்சார பாரம்பரியம், நவீன கதைசொல்லல் ஆகியவற்றின் சக்திவாய்ந்த கலவையை பிரதிபலிக்கிறது, இது இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள பார்வையாளர்களை வசீகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்திய பனோரமா பிரிவில் இது சேர்க்கப்பட்டிருப்பது படத்தின் கலை, கலாச்சார முக்கியத்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

*****

PLM/KV

 

 

iffi reel

(Release ID: 2076374) Visitor Counter : 18