தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
பட்டோ கா புல்புலா, கார்கென், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ஆகிய படங்களின் படக்குழுவினர் பங்கேற்ற செய்தியாளர் சந்திப்பு- கோவா திரைப்பட விழாவில் இன்று நடைபெற்றது
கோவாவில் நடைபெற்று வரும் 55-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (ஐஎஃப்எஃப்ஐ) பட்டோ கா புல்புலா, கார்கென், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ஆகிய மூன்று படங்களின் நடிகர்கள், படக் குழுவினர் இன்று (23.11.2024) பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்றனர். திரைப்பட குழுவினர் அந்தந்த படைப்பு பயணங்கள், தயாரிப்பின் போது எதிர்கொட்ட சவால்கள் பற்றிய நுண்ணறிவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.
கார்கென் – பேரார்வம், மீட்பின் பயணம்:
சமூக எதிர்பார்ப்புகளுக்கும் தனிப்பட்ட விருப்பங்களுக்கும் இடையில் சிக்கித் தவிக்கும் ஒரு தனிநபரின் உள் முரண்பாட்டை ஆராய்கின்ற தனது திரைப்படத்தைப் பற்றி கார்கென் இயக்குநர் நென்டென்ட் லோடர் உணர்ச்சிகரமாகப் பேசினார். "இது மீட்பின் கதை; இது உங்கள் உள் குரலைக் கண்டுபிடிப்பதற்கான பயணத்தைப் பற்றியது" என்று லோடர் கூறினார். அருணாச்சல பிரதேசத்தில் படப்பிடிப்பு நடத்துவதில் உள்ள சிரமத்தைப் பற்றியும் அவர் எடுத்துரைத்தார். படத்தைத் தயாரிப்பதில் ஆதரவளித்த தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகத்திற்கு (என்எஃப்டிசி) லோடர் நன்றி தெரிவித்தார்.
ஒளிப்பதிவாளர் நியாகோ ஒரு குறுகிய இடத்தில் படப்பிடிப்பு நடத்திய தமது அனுபவத்தை ஒரே ஒரு கதாபாத்திரத்துடன் பகிர்ந்து கொண்டார். இது அவர் இதற்கு முன்பு எதிர்கொள்ளாத சவால் என்று அவர் தெரிவித்தார்.
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் – ஒரு மோசமான கும்பல் தலைவனை நல்லவராக மாற்றும் சக்தி திரைப்படத்திற்கு உண்டு:
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ், படத்தின் அடிப்படை கருப்பொருளைப் பற்றி பேசினார். சமூகத்தை மாற்றும் மாபெரும் ஆயுதம் சினிமா என்று அவர் கூறினார். ஒரு தாதாவைக் கூட நல்லவராக மாற்றும் சக்தி அதற்கு உண்டு என்று கார்த்திக் சுப்புராஜ் குறிப்பிட்டார்.
பாட்டோ கா புல்புலா - ஹரியானாவில் கிராம வாழ்க்கையின் கொண்டாட்டம்:
பட்டோ கா புல்புலாவின் எடிட்டர் சாக்ஷம் யாதவ், படப்பிடிப்புக்குப் பிந்தைய பணிகளின் போது எதிர்கொள்ளும் தனித்துவமான சவால்களைப் பற்றி விவாதித்தார்.
படத்தின் புகைப்பட இயக்குநர் ஆர்யன் சிங், குழுவின் அர்ப்பணிப்பை மேலும் விரிவாகக் கூறினார். இந்த கதை ஹரியானாவின் கிராம வாழ்க்கையில் ஆழமாக வேரூன்றியுள்ளது என்று அவர் விளக்கினார்.
*****
PLM/KV
(Release ID: 2076320)
Visitor Counter : 12