பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய மாணவர் படையின் 76-வது நிறுவன தினம் நாளை கொண்டாடப்படுகிறது

Posted On: 23 NOV 2024 1:29PM by PIB Chennai

 

1948-ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய சீருடை இளைஞர் அமைப்பான தேசிய மாணவர் படை (NCC), அதன் 76-வது நிறுவன தினத்தை 2024 நவம்பர் 24 அன்று பாரம்பரிய உற்சாகத்துடன் கொண்டாடுகிறது. இந்த தினத்தையொட்டி, பாதுகாப்புத் துறைச் செயலர் திரு ராஜேஷ் குமார் சிங், புதுதில்லி இந்தியா கேட்டில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் ஒட்டுமொத்த தேசிய மாணவர் படை சார்பாக, வீரமரணம் அடைந்த போர் வீரர்களுக்கு இன்று (23.11.2024) மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

நிகழ்ச்சியில் பேசிய பாதுகாப்புச் செயலாளர், தேசிய மாணவர் படை, மாணவர்களின் எண்ணிக்கையை 3 லட்சமாக உயர்த்துவதில் பாராட்டத்தக்க முயற்சிகளை மேற்கொண்டுள்ளது என்றார். வரும் ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 20 லட்சத்தை எட்டும் என்றும் அவர் கூறினார். மத்திய அரசின் முக்கிய குறிக்கோளான வளர்ச்சி அடைந்த பாரதம் என்பதை எட்டுவதில் தேசிய மாணவர் படையின் பங்கை அவர் எடுத்துரைத்தார்.

 76-வது நிறுவன தினத்தை முன்னிட்டு தேசிய மாணவர் படை வீரர்கள் பல்வேறு நகரங்களில், பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்இந்தியா முழுவதும் என்சிசி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் நாடு தழுவிய இரத்த தான முகாமுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தவிர, மரக் கன்று நடும் இயக்கம், சிலைகளை சுத்தம் செய்தல், தூய்மை இயக்கம், போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு போன்ற பல்வேறு சமூக நடவடிக்கைகளுக்கும் கலாச்சார விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

*****

PLM/KV

 

 

 

 

 


(Release ID: 2076293) Visitor Counter : 29