பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

இந்திய வருகை நினைவுச் சின்னத்தை பிரதமர் பார்வையிட்டார்

प्रविष्टि तिथि: 21 NOV 2024 10:00PM by PIB Chennai

ஜார்ஜ்டவுனில் உள்ள நினைவுச் சின்னத் தோட்டத்தில் உள்ள இந்திய வருகைச் சின்னத்தை பிரதமர் இன்று பார்வையிட்டார். அவருடன் கயானா பிரதமர் பிரிகேடியர் (ஓய்வு) மார்க் பிலிப்ஸும் சென்றார். வருகை நினைவுச் சின்னத்தில் மலர் அஞ்சலி செலுத்திய பிரதமரை தாஸ்ஸா டிரம்ஸ் இசைக் குழுவினர் வரவேற்றனர். நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிரதமர், வெளிநாடுவாழ் இந்தியர்களின் போராட்டம் மற்றும் தியாகங்களையும், கயானாவில் இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைப் பாதுகாத்து மேம்படுத்துவதில் அவர்களின் முக்கிய பங்களிப்பையும் நினைவு கூர்ந்தார். நினைவுச்சின்னத்தில் பெல் பத்ரா மரக்கன்றை அவர்  நட்டார்.

 

இந்த நினைவுச்சின்னம், 1838-ஆம் ஆண்டில் இந்தியாவிலிருந்து ஒப்பந்த அடிப்படையில் குடியேறியவர்களை கயானாவுக்கு அழைத்து வந்த முதல் கப்பலின் நுட்பமான நகலாகும். இது 1991-ஆம் ஆண்டில் கயானா மக்களுக்கு இந்தியாவால் பரிசளிக்கப்பட்டது.

 

TS/BR/KR

***


(रिलीज़ आईडी: 2075816) आगंतुक पटल : 80
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam