பிரதமர் அலுவலகம்
சுரினாம் அதிபருடன் பிரதமர் சந்திப்பு
Posted On:
21 NOV 2024 10:57PM by PIB Chennai
கயானாவின் ஜார்ஜ்டவுன் நகரில் நவம்பர் 20 அன்று நடைபெற்ற இந்திய-கேரிகாம் 2-வது உச்சிமாநாட்டின் இடையே, சுரினாம் அதிபர் மேதகு திரு. சந்திரிகாபெர்சாத் சந்தோக்கியை பிரதமர் திரு. நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார்.
தற்போது நடைபெற்று வரும் இருதரப்பு முன்முயற்சிகளின் முன்னேற்றம் குறித்து இரு தலைவர்களும் ஆய்வு செய்ததுடன், பாதுகாப்பு, வர்த்தகம், விவசாயம், டிஜிட்டல் முன்முயற்சிகள் மற்றும் யு.பி.ஐ, தகவல் தொடர்பு தொழில்நுட்பம், சுகாதாரம் மற்றும் மருந்துகள், திறன் வளர்ப்பு, கலாச்சாரம் மற்றும் மக்களுக்கு இடையேயான உறவுகள் போன்ற துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்த ஒப்புக்கொண்டனர். சுரினாமுடனான வளர்ச்சி ஒத்துழைப்புக்கு, குறிப்பாக சமூக மேம்பாட்டுத் திட்டங்கள், உணவுப் பாதுகாப்பு முன்முயற்சிகள் மற்றும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதற்கு அதிபர் திரு சந்தோக்கி பாராட்டு தெரிவித்தார்.
பிராந்திய மற்றும் உலகளாவிய முன்னேற்றங்கள் குறித்தும் இரு தலைவர்களும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியா உறுப்பினராவதற்கு சுரினாம் அளித்த ஆதரவுக்காக அதிபருக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார்.
TS/BR/KR
***
(Release ID: 2075770)
Visitor Counter : 9