தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
iffi banner
0 5

55-வது சர்வதேச திரைப்பட விழாவில் நடைபெற்ற முதல் குழு விவாதம் பெண்களின் பாதுகாப்பு மற்றும் சினிமாவை எடுத்துரைக்கிறது

55-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின்முதல் குழு விவாதம், பெண்களின் பாதுகாப்பு மற்றும் சினிமா குறித்த கலந்துரையாடலுடன் இன்று தொடங்கியது. புகழ்பெற்ற நடிகரும் தயாரிப்பாளருமான வாணி திரிபாதி டிக்கூவால் நிர்வகிக்கப்பட்ட இந்த அமர்வு, திரைப்படத் தயாரிப்பாளர் இம்தியாஸ் அலி, நடிகர்கள் சுஹாசினி மணிரத்னம், குஷ்பூ சுந்தர் மற்றும் பூமி பெட்னேகர் உள்ளிட்ட குழு உறுப்பினர்களை ஒன்றிணைத்து, திரைப்படத் துறையில் பெண்களின் பாதுகாப்பு, பாலின பிரதிநிதித்துவம் மற்றும் சமூக மதிப்புகளை வடிவமைப்பதில் சினிமா வகிக்கும் பங்கு ஆகியவற்றைச் சுற்றியுள்ள முக்கியமான பிரச்சினைகள் குறித்து விவாதித்தது.

திரையிலும், திரைக்குப் பின்னாலும், திரைப்படத் துறை பெண்களுக்கு எவ்வாறு சிறப்பாக ஆதரவளிக்கவும், அதிகாரம் அளிக்கவும் முடியும் என்பது குறித்த தனிப்பட்ட அனுபவங்களையும், நுண்ணறிவுகளையும் குழு உறுப்பினர்கள் பகிர்ந்து கொண்டனர். சினிமாவில் பெண்கள் துன்புறுத்தல் அல்லது உழைப்பு சுரண்டல் பற்றிய கவலைகள் இல்லாமல், சுதந்திரமாக பணியாற்றக்கூடிய பாதுகாப்பான சூழலை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை அவர்கள் வலியுறுத்தினர்.

விவாதத்தின் ஒரு குறிப்பிடத்தக்க பகுதி, ஒரு குற்றவாளி அடையாளம் காணப்பட்டால் திரைப்பட செட்கள் எவ்வாறு பதிலளிக்க வேண்டும் என்பதைச் சுற்றி வந்தன. பணியிடத்தில் பாலின அநீதிக்கு சகிப்புத்தன்மை இனி ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்று குழு உறுப்பினர்கள் ஒப்புக் கொண்டனர். ஆண் நடிகர்கள் அடிக்கடி செட்டுக்கு வந்து காட்சிகளில் மாற்றங்களை பரிந்துரைக்கிறார்கள் என்பது குறித்த தனது அனுபவத்தை சுஹாசினி மணிரத்னம் பகிர்ந்து கொண்டார். இது பெண்களிடம் அரிதாகவே நடக்கும் ஒரு நடைமுறை. பெண்கள் தங்கள் பிரதிநிதித்துவத்தில் செயலற்ற பங்கேற்பாளர்களாக இருக்காமல், தங்கள் காட்சிகளை பொறுப்பேற்று பேச்சுவார்த்தையைத் தொடங்க வேண்டும் என்று அவர் எடுத்துரைத்தார். தொழில் வல்லுநர்கள் துறையில் நுழைவதற்கு முன்பு பணி நெறிமுறைகளைப் புரிந்துகொள்வது முக்கியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

செட்டில் உள்ள பெண்கள் எவ்வாறு நடத்தப்படுவார்கள் என்பதைப் பற்றி கவலைப்படாமல், கலையில் மட்டுமே கவனம் செலுத்தக்கூடிய ஒரு பணி கலாச்சாரத்தை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை இம்தியாஸ் அலி வலியுறுத்தினார். படப்பிடிப்புத் தளங்களில் பாலின அநீதியை திரைப்படத் தயாரிப்பாளர்கள் பொறுத்துக்கொள்ள முடியாது என்று அவர் வெளிப்படுத்தினார்.

திரைப்படங்களில் பெண்களின் சித்தரிப்பு மற்றும் அவர்களுக்கு பாதுகாப்பான இடத்தை உருவாக்குவதில் அது எவ்வாறு நேரடியாக பாதிக்கிறது என்பதையும் உரையாடல்  விளக்கியது. பெண்களின் கண்ணியமும், அவர்கள் திரையில் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் விதமும், மரியாதைக்குரிய மற்றும் அதிகாரமளிக்கும் சூழலை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதை பூமி பெட்னேகர் ஆர்வத்துடன் வலியுறுத்தினார்.

பொழுதுபோக்கு படங்களை தயாரிப்பதில் கவனம் செலுத்தும் அதே வேளையில், சமத்துவம் மற்றும் மரியாதை கொள்கைகளில் தனது பணி சமரசம் செய்யாமல் இருப்பதை உறுதி செய்வதாக குஷ்பூ சுந்தர் மேலும் கூறினார். பெண்களை கண்ணியத்துடன் சித்தரிப்பது கதாபாத்திரங்களைப் பற்றியது மட்டுமல்ல, தொழில்துறைக்கு ஒரு முன்னுதாரணத்தை அமைப்பது என்று குழு உறுப்பினர்கள் கூட்டாக ஒப்புக்கொண்டனர்.

இந்த விவாதத்தில் பார்வையாளர்களிடமிருந்து தீவிர ஈடுபாடு காணப்பட்டது, அவர்கள் சினிமாவில் பெண்களின் வளர்ந்து வரும் பங்கு மற்றும் அவர்களின் பாதுகாப்பு அல்லது கண்ணியத்தை சமரசம் செய்யாமல் அவர்கள் வெற்றிபெறுவதற்கான இடங்களை தொழில்துறை எவ்வாறு தொடர்ந்து உருவாக்க முடியும் என்பது குறித்து கேள்விகளை எழுப்பினர்.

IFFI 2024-ன் முதல் குழுவாக, இந்த உரையாடல், சினிமா கலையைக் கொண்டாடுவது மட்டுமல்லாமல், அனைவருக்கும் பாதுகாப்பான, அனைவரையும் உள்ளடக்கிய எதிர்காலத்தை வடிவமைப்பதில் தொழில்துறையின் பொறுப்பை விமர்சன ரீதியாக ஆராய வழிவகுத்தது. 

***

MM/AG/DL

iffi reel

(Release ID: 2075653) Visitor Counter : 23