தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
ஃபிலிம் பஜாரின் 18-வது பதிப்பு கோவாவில் நடைபெறும் ஐ.எஃப்.எஃப்.ஐ-ல் தொடங்கியது
55-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (ஐ.எஃப்.எஃப்.ஐ), தெற்காசியாவின் முதன்மையான திரைப்பட சந்தையான ஃபிலிம் பஜாரின் 18-வது பதிப்பைத் தொடங்கியது. ஐ.எஃப்.எஃப்.ஐ-இன் ஒரு குறிப்பிடத்தக்க பிரிவான ஃபிலிம் பஜார் ஆர்வமுள்ள திரைப்படத் தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுக்கு திரைப்படத்தின் எதிர்காலத்தை இணைக்கவும், ஒத்துழைக்கவும், உந்துதல் அளிக்கவும் ஒரு தளத்தை வழங்குகிறது.
தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் செயலாளர் திரு சஞ்சய் ஜாஜு, ஐ.எஃப்.எஃப்.ஐ.யில் ஃபிலிம் பஜாரைத் திறந்து வைத்து பேசியபோது, "எதிர்கால திரைப்பட தயாரிப்பாளர்களை வளர்ப்பதற்கான ஒரு தனித்துவமிக்க தளம், இது. யோசனைகளை முன்வைப்பது முதல் ஒப்பந்தங்களைப் பெறுவது வரை, ஃபிலிம் பஜார் தொழில்துறையின் அனைத்து மட்டங்களிலும் உற்பத்தி தொடர்புகளை வளர்க்கிறது", என்று குறிப்பிட்டார்.
இளம் திறமைகளை ஊக்குவிப்பதில் ஐ.எஃப்.எஃப்.ஐ.யின் உறுதிப்பாடு குறித்து அவர் மேலும் விரிவாக எடுத்துரைத்தார். "இந்த ஆண்டின் கிரியேட்டிவ் மைண்ட்ஸ் ஆஃப் டுமாரோ திட்டம், திரைப்படத் தயாரிப்பில் இந்தியாவின் பிரகாசமான இளம் திறமைகளைக் கண்டறிந்து வளர்ப்பதற்கான ஒரு கலங்கரை விளக்கம், இது குறிப்பிடத்தக்க விரிவாக்கத்தைக் கொண்டுள்ளது" என்று அவர் மேலும் கூறினார்.
இளம் திரைப்படத் தயாரிப்பாளர்கள் தங்கள் யோசனைகளையும் படைப்புகளையும் ஆர்வத்துடன் முன்வைக்கும் ஒரு சுவாரஸ்யமான தளமாக ஃபிலிம் பஜார் இருப்பதாக விழா இயக்குநர் திரு சேகர் கபூர் விவரித்தார்.
தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் இணைச் செயலாளரும், என்.எஃப்.டி.சி.யின் நிர்வாக இயக்குநருமான திரு பிரிதுல் குமார், இணையவழி ஃபிலிம் பஜார் முயற்சியைத் தொடங்குவதாக அறிவித்தார். புதுமையான தளம் உலகளாவிய வாங்குபவர்கள் மற்றும் விற்பனையாளர்களை இணைக்கவும், கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளவும், திரைப்பட வணிகத்தை முன்னோக்கி நகர்த்தவும் ஒரு மெய்நிகர் மையமாக செயல்படுகிறது என்று அவர் கூறினார்.
ஏழு நாடுகளைச் சேர்ந்த 21 திரைப்படங்கள் மற்றும் 8 வலைத்தளத் தொடர்கள் இடம்பெற்ற கூட்டுத் தயாரிப்பு சந்தை விவரங்களை தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் (திரைப்படங்கள்) திருமிகு விருந்தா மனோகர் தேசாய் வெளியிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=2075217®=1&lang=1
***
TS/BR/KR
(Release ID: 2075388)
Visitor Counter : 6
Read this release in:
English
,
Khasi
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Konkani
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Kannada
,
Malayalam