தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
ஆஸ்திரேலிய திரைப்படமான "பெட்டர் மேன்" உடன் தொடங்கியது, 55-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா
இசையைப் போலவே, எல்லைகளைக் கடந்து ஆன்மாக்களை உணர்ச்சிகளின் உலகளாவிய மொழியின் மூலம் இணைக்கும் இணையற்ற திறனைத் திரைப்படம் கொண்டுள்ளது. இந்த உருமாறும் கலை வடிவத்தின் கொண்டாட்டத்தில், கோவாவின் துடிப்பான கலாச்சாரத்தின் மத்தியில் நடைபெறும் 55-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா (ஐ.எஃப்.எஃப்.ஐ), மைக்கேல் கிரேசி இயக்கிய 'பெட்டர் மேன்' திரைப்படத்துடன் தொடங்கியது. இந்தப் படம், பாப் ஜாம்பவான் ராபி வில்லியம்ஸின் நெகிழ்வு, புகழ் மற்றும் அசாதாரண வாழ்க்கைக்கு ஒரு திரைப்பட அஞ்சலியாகும் .
தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் செயலாளர் திரு சஞ்சய் ஜாஜு, இணைச் செயலாளர் திரு விருந்தா தேசாய், விழா இயக்குநர் திரு சேகர் கபூர் மற்றும் கோவா பொழுதுபோக்கு சங்கத்தின் துணைத் தலைவர் திருமதி டெலிலா எம் லோபோ ஆகியோர் படத்தின் தயாரிப்பாளர் திரு பால் கியூரி மற்றும் நடிகை திருமதி ரேச்சல் பன்னோ ஆகியோரைப் பாராட்டினர்.
திரையிடலுக்கு முன்னர் தனது உரையில், திரு பால் கியூரி, "இந்தப் படம் ராபியை உலகம் எவ்வாறு உணர்கிறது என்பதைப் பற்றியது அல்ல, மாறாக ராபி தன்னை எவ்வாறு உணர்கிறார் என்பதைப் பற்றியது" என்று குறிப்பிட்டார். இந்த மதிப்புமிக்க மேடையில் படத்தை திரையிடுவதில் அவர் மேலும் தனது உற்சாகத்தை வெளிப்படுத்தினார். "ஐ.எஃப்.எஃப்.ஐ எனக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது" என்று திருமதி ரேசெல் பானோ பகிர்ந்து கொண்டார். படத்தின் இயக்குநர் திரு மைக்கேல் கிரேசி, "பாலிவுட் சினிமா எனது படைப்புகளில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது" என்று கூறினார்.
'பெட்டர் மேன்' இன் முதல் காட்சி, பார்வையாளர்களின்பலத்த கைதட்டல்களைப் பெற்றது. இந்த ஆண்டு ஐ.எஃப்.எஃப்.ஐ-இல் மறக்கமுடியாத திரையிடல்களில் ஒன்றாக அதன் இடத்தை உறுதிப்படுத்தியது. புகழின் சவால்களை நேர்மையாக சித்தரித்ததற்காகவும், நெகிழ்ச்சி மற்றும் சுய கண்டுபிடிப்பின் கொண்டாட்டத்திற்காகவும் பங்கேற்பாளர்கள் படத்தைப் பாராட்டினர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=2075243®=1&lang=1
***
TS/BR/KR
(Release ID: 2075387)
Visitor Counter : 6