பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

நிலையான வளர்ச்சி மற்றும் எரிசக்தி மாற்றம் குறித்த ஜி20 அமர்வில் பிரதமரின் உரை

Posted On: 20 NOV 2024 1:34AM by PIB Chennai

நிலையான வளர்ச்சி மற்றும் எரிசக்தி மாற்றம் குறித்த ஜி-20 உச்சி மாநாட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார். 2030-ம் ஆண்டுக்குள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறனை மும்மடங்காக உயர்த்தவும், எரிசக்தி சிக்கன விகிதத்தை இரட்டிப்பாக்கவும் இந்தக் குழு புதுதில்லி ஜி-20 உச்சிமாநாட்டின் போது தீர்மானித்திருந்ததை பிரதமர் குறிப்பிட்டார். இந்த நிலையான வளர்ச்சி முன்னுரிமைகளை முன்னெடுத்துச் செல்வதற்கான பிரேசிலின் முடிவை அவர் வரவேற்றார்.

நீடித்த வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக இந்தியா எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து பிரதமர் விரிவாக எடுத்துரைத்தார். கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா 4 கோடி குடும்பங்களுக்கு வீட்டு வசதி வழங்கியுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் 120 மில்லியன் வீடுகளுக்கு சுத்தமான குடிநீர் கிடைத்துள்ளது; 100 மில்லியன் குடும்பங்களுக்கு தூய்மையான சமையல் எரிவாயு வசதியும், 115 மில்லியன் குடும்பங்கள் கழிப்பறை வசதியும் பெற்றுள்ளன என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

பாரீஸ் மாநாட்டில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றிய முதல் ஜி-20 நாடு இந்தியா என்று குறிப்பிட்ட பிரதமர், 2030-ம் ஆண்டுக்குள் 500 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை உற்பத்தி செய்ய இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும், அதில் 200 ஜிகாவாட் எட்டப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். சர்வதேச சூரியசக்தி கூட்டணி, பேரிடர் தடுப்பு உள்கட்டமைப்புக்கான கூட்டணி, மிஷன் லைஃப், ஒரே சூரியன், ஒரே உலகம், ஒரே தொகுப்பு, உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணி போன்ற இந்தியா மேற்கொண்டுள்ள உலகளாவிய முன்முயற்சிகள் குறித்து அவர் விளக்கினார். உலகின் தெற்குப் பகுதியின், குறிப்பாக வளரும் சிறிய தீவுகள் நாடுகளின் நிலையான வளர்ச்சித் தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்த பிரதமர், மூன்றாவது உலகளாவிய தெற்கு உச்சிமாநாட்டில் இந்தியா அறிவித்த உலகளாவிய வளர்ச்சி ஒப்பந்தத்திற்கு நாடுகள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

பிரதமரின் முழு கருத்துக்களை இங்கே காணலாம்.

***

(Release ID: 2074826)
TS/PKV/RR


(Release ID: 2074990) Visitor Counter : 9