பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
வடகிழக்கு மாநிலங்களை இந்தியாவின் பிரதான வளர்ச்சியில் ஒரு அங்கமாக மாற்றியவர் பிரதமர் மோடி: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்
Posted On:
18 NOV 2024 4:20PM by PIB Chennai
அருணாசலப்பிரதேச மாநிலம் நம்சாய் மாவட்டத்தில், 2-வது நாளாக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் அலுவலக இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், முன்னேற்றத்தை விரும்பும் மாவட்ட திட்டத்தின்கீழ் நம்சாய் மாவட்டத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார். ஒத்துழைப்பு, ஒருங்கிணைப்பு மற்றும் போட்டித்தன்மையை வலியுறுத்திய அவர், பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையால் ஏற்பட்டுள்ள மாற்றங்களின் விளைவுகளை சுட்டிக்காட்டினார். வடகிழக்கு மாநிலங்களை இந்தியாவின் பிரதான வளர்ச்சி வரலாற்றின் ஒரு அங்கமாக மாற்றியவர் பிரதமர் மோடி என்றும் அவர் குறிப்பிட்டார்.
2014-ம் ஆண்டுக்கு முன்பு வடகிழக்கு மாநிலங்கள், நாட்டின் பிற பகுதியிலிருந்து விலகி இருந்ததாக கூறிய மத்திய அமைச்சர், தற்போது இந்த மாநிலங்கள் இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் வளர்ச்சி அடையாளத்தின் ஒருங்கிணைந்த அங்கமாக திகழ்வதாகவும் தெரிவித்தார்.
முன்னேற்றத்தை விரும்பும் மாவட்டங்களின் தரவரிசையில் 97-வது இடத்தில் இருந்த நம்சாய் மாவட்டம், தற்போது 12-வது இடத்திற்கு முன்னேறியிருப்பதாகவும் அவர் கூறினார். இம்மாவட்டத்தில், சுகாதார வசதிகள் 100 சதவீதம் ஏற்படுத்தப்பட்டிருப்பதுடன், தாய்- சேய் பராமரிப்பும் மேம்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டார். நம்சாய் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மேம்பட்ட கட்டமைப்பு வசதிகள் மற்றும் எழுத்தறிவு மூலம் தற்போது முன்னணியில் இருப்பதாகவும் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2074266
------
TS/MM/KPG/DL
(Release ID: 2074365)
Visitor Counter : 14