தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
இந்திய சர்வதேச திரைப்பட விழா 2024-ல் திரைப்பட காட்சி இன்பம் வழங்க முதன்மைத் திரைப்படங்களும் சிவப்புக் கம்பள வரவேற்பு நிகழ்வுகளும் காத்திருக்கின்றன
55 வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட முதன்மைத் திரைப்படங்களும் சிவப்புக் கம்பள வரவேற்பு நிகழ்வுகளும், சினிமா கலைத்திறன், உலகளாவிய திறமை, விதிவிலக்கான கதைசொல்லல் ஆகியவற்றின் திகைப்பூட்டும் கொண்டாட்டமும் பார்வையாளர்களைக் கவர்ந்திழுக்க தயாராக உள்ளன.
இந்த ஆண்டின் முதன்மைத் திரைப்படங்கள் வரிசை சிறப்பானதொரு சினிமா விருந்தாக இருக்கும் என்பதை உறுதிசெய்கிறது. இது திரைப்படங்கள், வலைத் தொடர்கள் மற்றும் ஆவணப்படங்களைத் தேர்ந்தெடுத்து பார்க்கும் வாய்ப்பை வழங்குகிறது.
2024 -இன் முதன்மைத் திரைப்படங்கள் பல்வேறு வகைகள், மொழிகள் மற்றும் கலாச்சாரங்களை உள்ளடக்கியதாக இருக்கும். இதில் ஒன்பது உலக முதன்மைத் திரைப்படங்கள் , நான்கு ஆசிய முதன்மைத் திரைப்படங்கள் , ஒரு இந்திய முதன்மைத் திரைப்படம் மற்றும் ஒரு சிறப்புக் காட்சி ஆகியவை இடம்பெறும்.
விறுவிறுப்பான க்ரைம் த்ரில்லர்கள் முதல் மனதைக் கவரும் குடும்பக் கதைப்படங்கள், சிந்தனையைத் தூண்டும் சமூக விவரிப்புகள் வரை, இந்த ஆண்டின் வரிசை ஒவ்வொரு சினிமா ஆர்வலரையும் ஈர்க்கும் என்பதை உறுதிசெய்கிறது. சிறப்புப் படைப்புகள் இந்தி, ஆங்கிலம், மராத்தி, மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளின் வளமான பன்முகத்தன்மையில் வழங்கப்படும். இது இந்திய சர்வதேச திரைப்பட விழா 2024-ன உலகளாவிய மற்றும் பிராந்திய சினிமாவின் உண்மையான உள்ளடக்கிய கொண்டாட்டத்தை உறுதிசெய்யும்.
தி பியானோ லெசன், ஜீரோ சே ரீஸ்டார்ட், சாலி மொஹாபத், ஸ்னோஃப்ளவர், புனே ஹைவே, ஹசார் வாலா ஷோலே பஹ்லிலா மானுஸ், தி மேத்தா பாய்ஸ், ஜப் குலி கிதாப், ஹிசாப் பராபர், திருமதி, பார்மா, விகடகவி, ஹெட்ஹன்டிங் டு பீட் பாக்ஸிங், மோனா 2, தி ராணா டகுபதி ஷோ ஆகியவை குறிப்பிடத்தக்க முதன்மைத் திரைப்படங்களில் அடங்கும். இந்தப் படங்கள் எல்லைகளைக் கடந்த அனுபவங்களைப் பெறவும் புதிய கதைசொல்லல் வடிவங்களை ஆராய்வதற்கும் ஒன்றிணைவதற்கும் ஊக்கமளிப்பதற்கும் சினிமாவின் சக்தியை முன்னிலைப்படுத்துவதற்கும் உறுதியளிக்கின்றன.
இந்திய சர்வதேச திரைப்பட விழா 2024 அதன் நட்சத்திரங்கள் நிறைந்த சிவப்பு கம்பள நிகழ்வுகளுடன் பிரகாசிக்கும். புகழ்பெற்ற திரைப்பட தயாரிப்பாளர்கள், நடிகர்கள், திரைப்பட உலகின் ஏனைய பிரமுகர்கள் தங்கள் வருகையால் இந்த நிகழ்வை அலங்கரிப்பார்கள்.
ராணா டகுபதி, விது வினோத் சோப்ரா, சன்யா மல்ஹோத்ரா,விக்ராந்த் மாஸ்ஸி, ஆர் மாதவன், ஏ.ஆர்.ரஹ்மான், சவுரப் சுக்லாஉள்ளிட்ட மதிப்புமிக்க நபர்கள் சிவப்புக் கம்பளத்தில் நடந்து, திரையுலக ஆளுமைகள் மற்றும் ஊடகங்களுடன் இணைந்து சினிமாவின் மாயாஜாலத்தைக் கொண்டாடுவார்கள்.
சிவப்புக் கம்பள வரவேற்புப் பிரிவு இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிகழ்வுகளில் ஒன்றாக தொடர்கிறது. இது தங்களுக்கு பிடித்த நட்சத்திரங்கள் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர்களுடன் நெருக்கமாக இருக்க ஒரு தனித்துவமான வாய்ப்பை ரசிகர்களுக்கு வழங்குகிறது.
******
TS/SMB/RR/BR/DL
(Release ID: 2074338)
Visitor Counter : 9