புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் நவம்பர் 14 மற்றும் 15 தேதிகளில் புவனேஸ்வரில் சிந்தனை அமர்வு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது
प्रविष्टि तिथि:
13 NOV 2024 9:59AM by PIB Chennai
மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் ஒடிசாவின் புவனேஸ்வரில் 2024 நவம்பர் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் இரண்டு நாள் 'சிந்தனை அமர்வு'-க்கு ஏற்பாடு செய்துள்ளது. 2030 ஆம் ஆண்டுக்குள் 500 ஜிகாவாட் என்ற எரிசக்தி இலக்கை அடைவதற்கான உத்திகள் மற்றும் 2047-ம் ஆண்டில் 1800 ஜிகாவாட் என்ற அடுத்த இலக்கை நோக்கி முன்னேறுவதற்கான உத்திகளில் இந்த நிகழ்வு கவனம் செலுத்தும்.
மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி, நவம்பர் 14 அன்று காலை 9 மணிக்கு இந்த நிகழ்வைத் தொடங்கி வைக்கிறார். ஒடிசா முதலமைச்சர் திரு மோகன் சரண் மாஜி; மத்திய இணை அமைச்சர் ஸ்ரீபாத் யெஸ்ஸோ நாயக்; ஒடிசா எரிசக்தித் துறை அமைச்சர் திரு கனக் வர்தன் சிங் தியோ; புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் செயலாளர் திரு. பிரசாந்த் குமார் சிங் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் உரையாற்றுகின்றனர்.
இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயணத்துடன் ஒருங்கிணைந்துள்ள முன்னணி முடிவெடுப்பவர்கள், நிதி நிறுவனங்கள், தொழிலதிபர்கள், தலைமை நிர்வாக அதிகாரிகள் மற்றும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் முக்கிய அதிகாரிகளை ஒன்றிணைப்பதை சிந்தனை அமர்வு நோக்கமாகக் கொண்டுள்ளது. பங்கேற்பாளர்கள் பல்வேறு கருப்பொருள் அமர்வுகள் மூலம் இந்தத் துறையில் உள்ள முக்கிய மற்றும் வளர்ந்து வரும் பிரச்சனைகள் குறித்து விவாதிப்பார்கள்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் - https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2072920
***
PKV/RR/KR
(रिलीज़ आईडी: 2072939)
आगंतुक पटल : 111