தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
iffi banner

இந்திய சர்வதேச திரைப்பட விழா 2024-ல் பங்கேற்க ஊடகவியலாளர்களுக்கான இறுதி அழைப்பு

 

கோவாவில் நவம்பர் 20 முதல் 28 வரை நடைபெறவுள்ள 55-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்க ஊடகவியலாளர்கள் பதிவு செய்ய இன்று கடைசி நாளாகும். 2024 நவம்பர் 12 இரவு மணி 11:59:59-க்குள் பதிவு செய்ய வேண்டும்.   

நீங்கள் ஒரு அனுபவமிக்க திரைப்பட விமர்சகராக இருந்தாலும் அல்லது கதை கூறலில் ஆர்வமுள்ள வளர்ந்து வரும் பத்திரிகையாளராக இருந்தாலும், கோவாவின் பனாஜியில் நடைபெறும் 55-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் சினிமா சிறப்பை அனுபவிக்க இது கடைசி வாய்ப்பாகும்.

ஊடகப் பிரதிநிதியாகப் பதிவு செய்ய 2024 ஜனவரி 1 அன்று 21 வயதை நிறைவு செய்திருக்க வேண்டும். மேலும் அச்சு, மின்னணு, டிஜிட்டல் அல்லது ஆன்லைன் மீடியா நிறுவனத்தைச் சேர்ந்த நிருபர், புகைப்படக் கலைஞர், கேமரா நபர் அல்லது டிஜிட்டல் உள்ளடக்கத்தை உருவாக்குபவராக இருக்க வேண்டும். வயது வரம்பை பூர்த்தி செய்யும் நிறுவனம் சாரா  பத்திரிகையாளர்களும் பதிவு செய்ய ஊக்குவிக்கப்படுகிறார்கள். பதிவு செய்வதற்கு முன் தகுதி வரம்பு, பதிவு செயல்முறை ஆகியவற்றை அறிந்து கொள்ள httpsmy.iffigoa.orgmedia-login என்ற இணையதளத்தைக் காணவும்.

ஊடகப் பிரதிநிதியாக உங்கள் அங்கீகாரத்திற்கான ஒப்புதல் உங்கள் விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்ட பின்னர் உங்கள் பதிவுசெய்த மின்னஞ்சல் முகவரியில் உங்களுக்குத் தெரிவிக்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2072605

---

IR/KPG/KV

 

iffi reel

(Release ID: 2072782) Visitor Counter : 39