பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரதமர் திரு நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு ஜமுயில் பழங்குடியினர் கௌரவ தின கொண்டாட்ட ஏற்பாடுகளை மத்திய அமைச்சர் திரு ஜூவல் ஓரம் ஆய்வு செய்தார்

प्रविष्टि तिथि: 11 NOV 2024 7:13PM by PIB Chennai

பழங்குடியினர் கௌரவ தின (ஜன்ஜாதியா கவுரவ் திவாஸ்) கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் திரு நரேந்திர மோடி பீகார் மாநிலம் ஜமுய் செல்லவுள்ளார். அவரது பயணத்திற்கு முன்னதாக, பழங்குடியினர் விவகாரங்கள் துறை அமைச்சர் திரு. ஜூவல் ஓரம் ஜமுய் நகரில் ஏற்பாடுகள் குறித்து  ஆய்வு செய்தார்.

அப்போது பேசிய அவர், 1999-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் பழங்குடியினர் விவகார அமைச்சகத்தை உருவாக்கியது பழங்குடியினர் நலனில் ஒரு மைல்கல்லாக அமைந்தது என்று எடுத்துரைத்தார். பழங்குடியினர் நலனுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அரசு எடுத்து வரும் முன்முயற்சிகளை அவர் எடுத்துரைத்தார்.

ஜமுய் மாவட்டத்தின் கைரா பகுதியில் அமைந்துள்ள பல்லோபூர் கிராமத்தில் நடைபெறும் பழங்குடியினர் கௌரவ தின கொண்டாட்டங்களில் பங்கேற்க பிரதமர் திரு நரேந்திர மோடி 2024 நவம்பர் 15 அன்று ஜமுய் செல்ல உள்ளார். இந்த நிகழ்ச்சியின் போது, பழங்குடியின சமூகங்களுக்கு அதிகாரம் அளிக்கும் நோக்கில், பழங்குடியினர் நலன் மற்றும் மேம்பாட்டுக்கான அரசின் பல கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை பிரதமர் தொடங்கி வைக்கிறார்.

பிரதமரின் வருகைக்கு முன்னதாக மத்திய அமைச்சர் ஜுவல் ஓரம் பல்லோபூருக்கு நேரில் சென்று, ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்.  

ஜமுயில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி, பீகார் ஆளுநர் திரு ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், முதலமைச்சர் திரு நிதீஷ் குமார் மற்றும் மத்திய, மாநில அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்வார்கள்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2072500

 

***

PLM/RS/DL


(रिलीज़ आईडी: 2072526) आगंतुक पटल : 60
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Odia , English , Urdu , हिन्दी , Manipuri , Punjabi , Kannada