குடியரசுத் தலைவர் செயலகம்
குடியரசுத் தலைவர் நவம்பர் 12 முதல் 14 வரை தாத்ரா - நகர் ஹவேலி மற்றும் டாமன் – டையூ-வுக்குப் பயணம் மேற்கொள்கிறார்
प्रविष्टि तिथि:
11 NOV 2024 6:47PM by PIB Chennai
குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு 2024 நவம்பர் 12 முதல் 14 வரை தாத்ரா - நகர் ஹவேலி மற்றும் டாமன் - டையூ யூனியன் பிரதேசங்களுக்குப் பயணம் மேற்கொள்கிறார்.
நவம்பர் 12 அன்று, (நாளை) டாமனில் உள்ள பறவைப் பண்ணை, அரசு பொறியியல் கல்லூரி, என்.ஐ.எஃப்.டி வளாகம் ஆகியவற்றை குடியரசுத் தலைவர் பார்வையிடுகிறார்.
நவம்பர் 13-ம் தேதி சில்வாசாவில் உள்ள நமோ மருத்துவக் கல்வி-ஆராய்ச்சி நிறுவனத்திற்குச்செல்லும் குடியரசுத் தலைவர், பல்வேறு கல்வி நிறுவனங்களின் மாணவர்களுடனும், ஆசிரியர்களுடனும் கலந்துரையாடுகிறார். அதைத் தொடர்ந்து, அவர் ஜாந்தா சௌக் பள்ளியைத் திறந்து வைக்கிறார். சில்வாசாவில் நடைபெறும் பொது நிகழ்ச்சியிலும் அவர் உரையாற்ற உள்ளார். அன்று மாலை அவர் ஐஎன்எஸ் குக்ரி நினைவிடத்தையும் பார்வையிடுகிறார்.
***
PLM/RS/DL
(रिलीज़ आईडी: 2072506)
आगंतुक पटल : 91