பிரதமர் அலுவலகம்
திரு டெல்லி கணேஷ் மறைவுக்கு பிரதமர் இரங்கல்
இடுகை இடப்பட்ட நாள்:
10 NOV 2024 5:49PM by PIB Chennai
ஒப்பற்ற திரைப்பட ஆளுமை திரு. டெல்லி கணேஷ் மறைவிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அப்பழுக்கற்ற நடிப்புத் திறமையால் ஆசீர்வதிக்கப்பட்ட திரு கணேஷ், ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அவர் கையாண்ட விதத்திற்காகவும், தலைமுறைகளைக் கடந்து பார்வையாளர்களுடன் இணைக்கும் அவரது திறனுக்காகவும் அன்புடன் நினைவுகூரப்படுவார் என்று திரு மோடி குறிப்பிட்டுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:
"புகழ்பெற்ற திரையுலக ஆளுமை திரு டெல்லி கணேஷ் அவர்களின் மறைவு ஆழ்ந்த வருத்தமளிக்கிறது. அவர் அப்பழுக்கற்ற நடிப்புத் திறமையால் ஆசீர்வதிக்கப்பட்டவர். ஒவ்வொரு பாத்திரத்தையும் அவர் அற்புதமாகக் கையாண்ட விதத்துக்காகவும், தலைமுறைகளைக் கடந்து பார்வையாளர்களை இணைக்கும் திறனுக்காகவும் அவர் அன்புடன் நினைவுகூரப்படுவார். நாடகத்தின் மீதும் ஆர்வம் கொண்டிருந்தார். அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் இரங்கல்கள். ஓம் சாந்தி’’.
*****
PKV/KV
(வெளியீட்டு அடையாள எண்: 2072185)
வருகையாளர் எண்ணிக்கை : 78
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam