உள்துறை அமைச்சகம்
மத்திய உள்துறை அமைச்சகம் சிறப்பு இயக்கம் 4.0-வை வெற்றிகரமாக நடத்தியுள்ளது
Posted On:
09 NOV 2024 1:48PM by PIB Chennai
தூய்மையை நிறுவனமயமாக்குவதற்கும், நிலுவையில் உள்ள பணிகளைக் குறைப்பதற்கும் மத்திய, உள்துறை அமைச்சகம் சிறப்பு இயக்கம் 4.0-வை வெற்றிகரமாக நடத்தியது. இந்த இயக்கம் 2024 அக்டோபர் 2 முதல் அக்டோபர் 31 வரை அமைச்சகத்திலும் அதன் இணைக்கப்பட்ட/துணை அலுவலகங்களிலும் ஏற்பாடு செய்யப்பட்டது.
தூய்மை, நிலுவையில் உள்ள பணிகளை நிறைவு செய்தல், சிறந்த இட மேலாண்மை, பணியிட அனுபவத்தை மேம்படுத்துதல் ஆகியவை இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கங்களாக இருந்தன.
மத்திய உள்துறை அமைச்சர், இணை அமைச்சர்கள், உள்துறை செயலாளர் ஆகியோர் நேரடியாக பங்கேற்று இந்த இயக்கம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது.
இந்த இயக்கம் 2024 செப்டம்பர் 15 முதல் ஆயத்த கட்டத்துடன் தொடங்கியது. உள்துறை அமைச்சகத்தில் 8982 இடங்களில் இது வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இயக்கத்தின்போது, நாடாளுமன்ற உறுப்பினர்களின் 92 குறிப்புகள், மாநில அரசுகளின் 153 குறிப்புகள், பிரதமர் அலுவலகம் தொடர்பான 104 குறிப்புகளுக்குத் தீர்வு காணப்பட்டன. மேலும், மொத்தம் 4724 பொதுமக்கள் குறை கேட்புகளுக்கும், 329 மேல்முறையீட்டு மனுக்களுக்கும் தீர்வு காணப்பட்டுள்ளன.
2,77,980 காகிதக் கோப்புகளும், 1,39,780 மின்னணு கோப்புகளும் ஆய்வு செய்யப்பட்டன. மொத்தம் 38,950 சதுர அடி இடம் விடுவிக்கப்பட்டு, கழிவுகள் அகற்றப்பட்டதன் மூலம் ரூ. 2.38 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
மத்திய ஆயுத போலீஸ் படைகள் (CAPFs), மத்திய காவல் அமைப்புகள் (CPOs), உள்துறை அமைச்சகத்தின் பிற பிரிவுகள் இந்த இயக்கத்தில் ஆர்வத்துடன் பங்கேற்றன. கிட்டத்தட்ட அனைத்து இலக்குகளிலும் 100 சதவீதத்தை அடைந்து இயக்கத்தின் வெற்றி உறுதி செய்யப்பட்டது.
*****
PLM/KV
(Release ID: 2072004)
Visitor Counter : 38