புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீடுகளின் பத்திரிகை வெளியீடுகளுக்கான வெளியீட்டு நேரத்தின் திருத்தம்

Posted On: 08 NOV 2024 10:50AM by PIB Chennai

மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய புள்ளியியல் அலுவலகம், பல்வேறு பேரியல் பொருளாதார குறியீடுகளின் முன்கூட்டி வெளியீட்டு அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள /  வெளியீட்டு அட்டவணைக்கு ஏற்ப மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வருடாந்திர மற்றும் காலாண்டு மதிப்பீடுகளை வெளியிடுகிறது httpswww.mospi.gov.insitesdefaultfilesmain_menuAdvance_Release_Calendar_16082024.pdf தற்போதைய நடைமுறையின்படி, மொத்த உள்நாட்டு உற்பத்தியின் பத்திரிகை வெளியீடுகள் குறிப்பிட்ட வெளியீட்டு தேதிகளில் மாலை 5.30 மணிக்கு திட்டமிடப்பட்டுள்ளன. இருப்பினும், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் தரவை அணுக, பயனர்கள்,  ஊடகங்கள்,  பொதுமக்களுக்கு வெளியிடப்பட்ட நாளில் அதிக நேரம் வழங்குவதற்கான முன்னோக்குடன், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பீடுகளின் பத்திரிகை வெளியீடுகளுக்கான வெளியீட்டு நேரத்தை மாலை 5.30 மணியிலிருந்து மாலை 4.00 மணிக்கு மாற்றி மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

புதிய வெளியீட்டு நேரம், இந்தியாவில் முக்கிய நிதிச் சந்தைகளின் இறுதி நேரங்களுடன் ஒத்துப்போகிறது, மொத்த உள்நாட்டு உற்பத்தியின் தரவு பரவல், ஆக்கப்பூர்வ வர்த்தகத்தில் தலையிடாது என்பதை உறுதி செய்கிறது. இந்த சீரமைவு தரவு பரவலில் வெளிப்படைத்தன்மை மற்றும் அணுகலுக்கான மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் உறுதிப்பாட்டையும் பின்பற்றுகிறது.

2024-25 நிதியாண்டின் இரண்டாவது காலாண்டிற்கான (ஜூலை - செப்டம்பர்) மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பீடுகளின் அடுத்த செய்தி வெளியீடு 2024 நவம்பர் 29 அன்று மாலை 4.00 மணிக்கு பத்திரிகை தகவல் அலுவலக மற்றும் அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (httpswww.mospi.gov.in) கிடைக்கும்.

----

(Release ID 2071663)

MM/KPG/RR


(Release ID: 2071706) Visitor Counter : 32