தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
iffi banner
0 2

இந்திய சர்வதேச திரைப்படவிழா 2024-ல் ஃபிலிம் பஜார் காட்சி அறையில் 208 படங்கள் திரையிடப்பட உள்ளன

இந்தியாவின் 55-வது சர்வதேச திரைப்பட விழா நவம்பர் மாதம் 20 முதல் 28 வரை கோவாவின் கலாச்சார சூழலை ஒளிரச் செய்ய உள்ளது. திரைப்பட விழாவின் 18-வது பதிப்பு நவம்பர் 20 முதல் 24 வரை நடைபெறும். இது திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களை இணைக்கவும், ஒத்துழைக்கவும், அவர்களின் படைப்புகளை வெளிப்படுத்தவும் ஒரு தளத்தை வழங்குகிறது.

இந்த ஆண்டு, ஃபிலிம் பஜார் காட்சி அறையில் இந்தியா மற்றும் தெற்காசியாவிலிருந்து நல்ல தரமான படங்கள்  இடம் பெறுகின்றன. விநியோக உதவி மற்றும் நிதியுதவி கோரும் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு ஒரு முக்கியமான மையமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. காட்சி அறையில் தயாரிப்பு முழுமையடைந்த அல்லது பிந்தைய தயாரிப்பு கட்டத்தில் உள்ள திரைப்படங்கள் இடம் பெறும்.  உலகளாவிய திரைப்பட விநியோகஸ்தர்கள், விற்பனை முகவர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் இங்கு ஒன்று சேர முடியும்.  நவம்பர் 21 முதல் 24 வரை காட்சி அறையில் திரைப்படங்களை பார்க்கலாம்.

இந்த ஆண்டு காட்சி அறையில் 208 திரைப்படங்கள் திரையிடப்படும். அவற்றில் 145 கதையம்சத் திரைப்படங்கள், 23 நடுத்தர நீளத் திரைப்படங்கள், 30 குறும்படங்கள் இடம் பெறும். 30 முதல் 70 நிமிடங்கள் வரை ஓடும் நடுத்தர நீளப்படங்கள்  காட்சிப்படுத்தப்படுகின்றன. 30 நிமிடங்களுக்கும் குறைவான நேரத்தில் திரைப்படங்கள்  பிரிவில் குறும்படங்கள் இடம் பெறும்.

-----

TS/IR/KPG/KR/DL

iffi reel

(Release ID: 2071245) Visitor Counter : 40