நிதி அமைச்சகம்
'சுங்க விநியோகச் சங்கிலித் தொடரில் பாலினச் சமத்துவத்தை உள்ளடக்குதல்' என்ற கருத்தரங்கு நடைபெற்றது
Posted On:
05 NOV 2024 12:12PM by PIB Chennai
புனேயில் உள்ள மத்திய சரக்கு மற்றும் சேவை வரி மற்றும் சுங்க மண்டலம் ஏற்பாடு செய்திருந்த 'சுங்க விநியோகச் சங்கிலித் தொடரில் பாலினச் சமத்துவத்தை உள்ளடக்குதல்'' என்ற தலைப்பிலான கருத்தரங்கிற்கு மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரிய உறுப்பினர் (சுங்கம்) திரு சுர்ஜித் புஜாபால் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார்.
பாலின சமத்துவத்தின் குறிப்பிடத்தக்க குறியீடாக பாலின உள்ளடக்கம் உள்ளது என்று அவர் கூறினார். இது பாலின பாகுபாட்டைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்காக பெண் தொழில்முனைவோருக்கு அதிகாரம் அளித்தல் மற்றும் அனைத்து பாலின மக்களும் மதிப்பு மற்றும் மரியாதையை உணரும் சூழலை உருவாக்குதல் ஆகியவையும் நோக்கங்கள் என்று எடுத்துரைத்தார்.
பின்னர் பேசிய புனே சுங்க மண்டல முதன்மை ஆணையர் திரு மயங்க் குமார், காவல்துறையில் பெண்கள் பணியாற்றுதல், உழைக்கும் பிரிவினரில் 25 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட பெண் பணியாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருதல்,பெண்கள் எதிர்கொள்ளும் உணர்வுரீதியான, உடல்ரீதியான மற்றும் நிதி சார்ந்த பிரச்சனைகள் ஆகியவை குறித்த ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் நடத்திய ஆய்வை பகிர்ந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய இணைச்செயலாளர் (சுங்கம்) திரு அனுபம் பிரகாஷ், பாலின உள்ளடக்கத்தை ஊக்குவிக்க அரசு எடுத்துள்ள பல்வேறு முன்முயற்சிகள், குறிப்பாக மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்கவாரியத்தின் நடவடிக்கைகள் பற்றி எடுத்துரைத்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2070777
***
TS/IR/RS/KR
(Release ID: 2070801)
Visitor Counter : 35