புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சர்வதேச சூரியசக்தி கூட்டணி 2024 – 2026-ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகளை அறிவித்துள்ளது

Posted On: 04 NOV 2024 6:04PM by PIB Chennai

புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்று வரும் சர்வதேச சூரிய சக்தி கூட்டமைப்பின் ஏழாவது அமர்வு, 2024 முதல் 2026 வரையிலான இரண்டாண்டு காலத்திற்கு அதன் தலைவர் மற்றும் இணைத் தலைவரைத் தேர்ந்தெடுத்துள்ளது. தலைவர் பதவிக்கு இந்தியா மட்டுமே போட்டியிட்டாலும், இணைத் தலைவர் பதவிக்கு பிரான்ஸ் மற்றும் கிரெனடா இடையே போட்டி ஏற்பட்டது. இதில் பிரான்ஸ்  வெற்றி பெற்றது.

சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பின் நடைமுறை விதிகளின்படி, தலைவர்,  இணைத் தலைவர், துணைத் தலைவர்கள் தேர்வு செய்யப்படலாம்.

சமமான புவியியல் பிரதிநிதித்துவத்திற்கு உரிய மதிப்பளித்து, தலைவரும், இணைத் தலைவரும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். உறுப்பு நாடுகளின் நான்கு பிராந்திய குழுக்களில், ஆப்பிரிக்கா, ஆசியா, பசிபிக், ஐரோப்பா மற்றும் லத்தீன் அமெரிக்கா, கரீபிய நாடுகள் உள்ளன. நிலைக்குழுவின் எட்டு துணைத் தலைவர்கள், நான்கு சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பு புவியியல் மண்டலங்களில் ஒவ்வொன்றிலிருந்தும் இருவர் தேர்ந்தெடுக்கப்படுவர்.

கானா குடியரசு மற்றும் சீஷெல்ஸ் குடியரசு ஆகியவை ஆப்பிரிக்க பிராந்தியத்திற்கான துணைத் தலைவர்களாக பதவி வகிப்பார்கள்; ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்திற்கான ஸ்திரேலிய, ஜெர்மனி, ஐரோப்பா மற்றும் பிற பிராந்தியத்திற்கான இத்தாலி குடியரசு, லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் பிராந்தியத்திலிருந்து கிரெனடா மற்றும் சுரிநாம் குடியரசு பிரதிநிதிகள் துணைத்தலைவர்களாக  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

சர்வதேச சூரியசக்தி கூட்டணியின் உச்ச முடிவெடுக்கும் அமைப்பு என்ற முறையில், இந்த அவைக்கு குறிப்பிடத்தக்க அதிகாரமும் பொறுப்பும் உள்ளது. இது ஒவ்வொரு உறுப்பு நாட்டையும் பிரதிநிதித்துவப்படுத்துவதுடன், சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பின் கட்டமைப்பு ஒப்பந்தத்தை அமல்படுத்துவது மற்றும் அதன் நோக்கங்களை அடைவதற்கு எடுக்கப்பட வேண்டிய ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் தொடர்பான முக்கிய முடிவுகளை எடுக்கிறது.

எரிசக்தி அணுகல், எரிசக்தி பாதுகாப்பு மற்றும் எரிசக்தி மாற்றம் ஆகிய மூன்று முக்கிய  அம்சங்களில் கவனம் செலுத்தும் வகையில், சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பின் முக்கிய முன்முயற்சிகள் குறித்து, ஏழாவது அமர்வு தற்போது விவாதித்து வருகிறது.

மேலும், விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2070661

***

MM/IR/RS/DL


(Release ID: 2070693) Visitor Counter : 49