உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு அமித் ஷா, குஜராத் மாநிலம் சலங்பூரில் உள்ள ஸ்ரீ கஷ்டபஞ்சன்தேவ் ஹனுமன் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்தார்; ரூ.200 கோடி செலவில் கட்டப்பட்ட 1100 அறைகள் கொண்ட யாத்ரி பவனைத் திறந்து வைத்தார்

Posted On: 31 OCT 2024 5:32PM by PIB Chennai

மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு அமித் ஷா, குஜராத்தின் சலங்பூரில் உள்ள ஸ்ரீ கஷ்டபஞ்சன் தேவ் ஹனுமன் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்தார். 200 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட 1100 அறைகளைக் கொண்ட யாத்ரி பவனைத் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய திரு அமித் ஷா, குஜராத் மக்களுக்கும் நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் முதலில் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்தார். இங்கு பிரம்மாண்டமான யாத்ரி பவன் கட்டப்பட்டுள்ளதாகவும், சதுர்தசியை முன்னிட்டு இன்று திறந்து வைக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த யாத்ரி பவன் முழுமையான பசுமை வசதி கொண்டது. தொலைதூரத்தில் இருந்து வரும் பக்தர்களைத்  தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 1100 அறைகளைக் கொண்ட யாத்ரி பவன்  ரூ.200 கோடி செலவில் 9 லட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது என்றும் இரண்டே ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது என்றும் திரு ஷா குறிப்பிட்டார்.

பகவான் ஹனுமன் மகாராஜின் குணங்களை விவரிக்க முயற்சிப்பது மனிதனுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், நமது வேதங்களின்படி, ஹனுமன் மகாராஜ் நம் உலகில் உள்ள அபூர்வமான ஏழு ஜீவன்களில் ஒருவர் என்றும் திரு  அமித் ஷா கூறினார். ஞானம் மற்றும் நற்பண்புகளின் கடல் ஹனுமன் என்று துளசிதாசர் குறிப்பிட்டார்.  சிறந்த பக்தர், சிறந்த போர்வீரர், சிறந்த நண்பர், சிறந்த தூதர் என்று சிறந்த  குணங்கள் அனைத்தையும் ஸ்ரீ ராமரின் பாதங்களில் அர்ப்பணிக்கும்போது, ஒருவர் ஹனுமன் மகாராஜைப் போல் மாறி அமரத்துவம் அடைகிறார் என்று திரு ஷா கூறினார்.

இன்று சர்தார் படேலின் 149-வது பிறந்த நாள் என்று மத்திய உள்துறை அமைச்சர் குறிப்பிட்டார். ஒன்றுபட்ட மற்றும் சக்திவாய்ந்த இந்தியாவை உருவாக்க சர்தார் படேல் உறுதிபூண்டதாக அவர் கூறினார். சர்தார் படேலின் 150 வது பிறந்த நாளை இரண்டு ஆண்டுகளுக்கு கொண்டாட பிரதமர் நரேந்திர மோடி எடுத்த முடிவு அவரது எண்ணங்களையும் கொள்கைகளையும் ஊக்குவிப்பது மட்டுமின்றி, நாட்டிற்காக அர்ப்பணிப்பு மற்றும் தியாகத்தை நோக்கி இளைஞர்களை ஊக்குவிக்கும் என்று திரு அமித் ஷா கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2069866  

***

SMB/DL




(Release ID: 2069876) Visitor Counter : 12


Read this release in: English , Urdu , Hindi , Gujarati