அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

இந்தியாவில் நீரிழிவு நோய் ஆய்வுக்கான சங்கத்தின் சர்வதேச 52-ம் ஆண்டு மாநாட்டை புதுதில்லியில் மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தொடங்கி வைக்கிறார்

Posted On: 30 OCT 2024 6:08PM by PIB Chennai

உலகின் மிகப்பெரிய நீரிழிவு நோய் மருத்துவர்களின் சங்கங்களில் ஒன்றான இந்தியாவில் நீரிழிவு நோய் ஆய்வுக்கான ஆராய்ச்சி சங்கத்தின் சர்வதேச 52-வது ஆண்டு மாநாட்டை மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தொடங்கி வைக்கிறார். இந்த மாநாடு நவம்பர் 14 முதல் 17 வரை, புதுதில்லி துவாரகாவில் உள்ள யசோபூமியில் நடைபெற உள்ளது.

இச்சங்கத்தின் தேசியத் தலைவர் டாக்டர் பி.எம்.மக்கார் இன்று டாக்டர் ஜிதேந்திர சிங்கை சந்தித்து தலைமை விருந்தினராக இருப்பதற்கு அவரது ஒப்புதலைக் கோரிய பின்னர் இதை உறுதிப்படுத்தினார்.

இந்தியாவில் நீரிழிவு நோய்  ஆய்வுக்கான ஆராய்ச்சி சங்கத்தின் வாழ்நாள் புரவலர் மற்றும் வாழ்நாள் சாதனையாளர் விருது வென்றவர் டாக்டர் ஜிதேந்திர சிங் என்பது குறிப்பிடத்தக்கது.

சுழற்சி முறையில் பல்வேறு இடங்களில் நடைபெறும் இந்த மதிப்புமிக்க முதன்மை நிகழ்வு கடைசியாக 2013-ல் தில்லியில் நடைபெற்றது, அப்போது டாக்டர் ஜிதேந்திர சிங் மாநாட்டின் அறிவியல் தலைவராக இருந்தார்.

இந்த நவம்பர் மாநாடு இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து நீரிழிவு நோய் துறையில் புகழ்பெற்ற நிபுணர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பயிற்சியாளர்களை அதிநவீன அறிவைப் பகிர்ந்து கொள்ளவும், புதிய ஆராய்ச்சிகளை ஆராயவும், நீரிழிவு நோயைக் கையாள்வதில் கூட்டு முயற்சிகளை முன்னெடுக்கவும் ஒன்றிணைக்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2069615

***

TS/IR/RS/DL


(Release ID: 2069675) Visitor Counter : 69