சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு, மத்திய அமைச்சர் திரு ஜெ.பி.நட்டா தேசிய ஒற்றுமைக்கான உறுதிமொழி ஏற்பை நிகழ்த்தி வைத்தார்
Posted On:
30 OCT 2024 10:50AM by PIB Chennai
தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் திரு ஜகத் பிரகாஷ் நட்டா தலைமையில், தில்லி நிர்மாண் பவனில் இந்தியாவின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை வலுப்படுத்தும் உறுதியேற்பு நிகழ்ச்சியில் மத்திய சுகாதார அமைச்சகத்தின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர். மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திரு பிரதாப்ராவ் ஜாதவ், மத்திய சுகாதாரத் துறை செயலாளர் திருமதி புண்யா சலிலா ஸ்ரீவத்சவா ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். நாட்டை ஒன்றிணைப்பதில் முக்கிய பங்கு வகித்த சர்தார் வல்லபாய் படேலைக் கௌரவிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
விழாவின் போது, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர், ஒருங்கிணைந்த மற்றும் முற்போக்கான சமுதாயத்தை வளர்ப்பதில் தேசிய ஒற்றுமையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். "சர்தார் படேல் முன்னெடுத்த ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு கொள்கைகளுக்கான நமது உறுதிப்பாட்டை இன்று மீண்டும் உறுதிப்படுத்துகிறோம். எங்கள் செயல்களும் கொள்கைகளும் இந்தியாவை தனித்துவமாக்கும். அனைவரையும் உள்ளடக்கிய, பன்முகத்தன்மையின் உணர்வை பிரதிபலிக்கும் வகையில் இதனை கடைபிடிப்பது எங்கள் கூட்டு பொறுப்பாகும்” என்று அவர் கூறினார்..
இந்த நிகழ்வில் உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் பங்கேற்பாளர்கள் அனைவரும் இந்தியாவின் பல்வேறு கலாச்சாரங்கள், மொழிகள் மற்றும் மரபுகளிடையே ஒற்றுமையின் பிணைப்புகளை வலுப்படுத்த பணியாற்றுவதாக உறுதி ஏற்றனர்.
பொது சுகாதாரத்தை மேம்படுத்துவது மற்றும் ஒற்றுமை மற்றும் சமத்துவத்தின் கொள்கைகளை, அனைத்து முயற்சிகளிலும் நிலைநிறுத்தப்படுவதை உறுதி செய்வது அனைவரது கடமையாகும். இதனை உறுதி செய்வதில் மத்திய சுகாதார அமைச்சகம் கவனம் செலுத்தி வருகிறது.
------
(Release ID: 2069446)
TS/PKV/KPG/RR
(Release ID: 2069455)
Visitor Counter : 38