உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் 20-வது அமைப்பு தின தொடக்க விழாவில் திங்களன்று மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவுத்துறை அமைச்சருமான திரு அமித் ஷா தலைமை விருந்தினராக  கலந்து கொள்கிறார்

Posted On: 26 OCT 2024 6:32PM by PIB Chennai

 

 புதுதில்லியில் திங்களன்று, 28 அக்டோபர், 2024, நடைபெறும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் 20-வது அமைப்பு தின தொடக்க விழாவில்  மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவுத்துறை அமைச்சருமான திரு அமித் ஷா தலைமை விருந்தினராக கலந்து கொள்வார்

பிரதமர் திரு நரேந்திர மோடியின் பேரிடர் அபாயக் குறைப்பு உத்திகளுக்கான 10 அம்ச செயல்திட்டத்துக்கு ஏற்ப, பேரிடர்களின் தாக்கத்தைத் தணிக்க அனைவரையும் உள்ளடக்கிய, ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை செயல்படுத்த இந்தியா உறுதிபூண்டுள்ளது. இந்த ஆண்டு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் அமைப்பு தின கருப்பொருள் "நடத்தை மாற்றத்திற்கான விழிப்புணர்வு மூலம் பேரழிவு அபாய குறைப்புக்கு சமூகங்களுக்கு அதிகாரமளித்தல்" என்பதாகும். இது பேரழிவு ஏற்பட வாய்ப்புள்ள  பகுதிகளிலும் அதைச் சுற்றிலும் வாழும் சமூகங்களின் அடையாளம் காணப்பட்ட பிரிவுகளில் நடத்தை மாற்றங்களைக் கொண்டுவருவதற்கான விழிப்புணர்வை உருவாக்கும் நடவடிக்கைகளுக்கு உத்வேகம் அளிக்கும். பேரழிவு அபாய குறைப்பு இலக்கை அடைய உதவும். நிகழ்வில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முக்கிய கருப்பொருளை மையமாகக் கொண்ட மூன்று தொழில்நுட்ப அமர்வுகள்: i) 'வானிலை மாற்றத்தை சமாளிக்கும் சமூகங்களின் குரல்கள்', ii) 'பேரிடர் அபாயக் குறைப்பு - கடைசி மைல் தகவல்தொடர்புக்கான தொழில்நுட்பம்', iii) 'மெதுவாகத் தொடங்கும் வானிலை நிகழ்வுகள், காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர்  குறைப்பு குறித்த விழிப்புணர்வு' . இது தவிர, வழிகாட்டுதல்கள், வெவ்வேறு பேரழிவு கருப்பொருள்கள் குறித்த புத்தகங்கள் உட்பட  பல்வேறு ஆவணங்கள் வெளியிடப்பட உள்ளன.

இந்த நிகழ்வில் மத்தியமாநில அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் மூத்த அதிகாரிகள், சர்வதேச / .நா நிறுவனங்களின் பிரதிநிதிகள், அதிகாரிகள், பேரிடர் மேலாண்மை நிபுணர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உறுப்பினர்கள் மற்றும் நாடு முழுவதும் இருந்து பேரிடர் மேலாண்மை துறையில் பணிபுரியும் முக்கிய பங்குதாரர்கள் பங்கேற்பார்கள். பிரமுகர்கள் தவிர, நேரு யுவ கேந்திரா சங்கதன் , தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித் திட்டம், பாரத சாரண, சாரணியர் இயக்கம் ஆகியவற்றின் தன்னார்வலர்களும் இந்த  நிகழ்வில் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளனர்.

 ********

SMB/ KV

 

 

 

 


(Release ID: 2068528) Visitor Counter : 25