தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
iffi banner
1 3

இந்திய சர்வதேச திரைப்பட விழா 2024: ஃபிலிம் பஜாரில் இணை தயாரிப்பு சந்தைக்கான தேர்வை தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகம் (என்.எஃப்.டி.சி ) அறிவித்துள்ளது

தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தின் (என்.எஃப்.டி.சி ) 18 வது ஃபிலிம் பஜாரில் ஏழு நாடுகளைச் சேர்ந்த 21 திரைப்படங்கள் மற்றும் 8 வலைத் தொடர்களை  இணை தயாரிப்பு சந்தைக்கான அதிகாரபூர்வ பட்டியலாக  அறிவிக்கப்பட்டுள்ளது. 2024 நவம்பர் 20 முதல் 28 வரை கோவாவில் நடைபெறவுள்ள இந்திய சர்வதேச திரைப்பட விழாவுடன் ஒவ்வொரு ஆண்டும் ஃபிலிம் பஜார் ஏற்பாடு செய்யப்படுகிறது. இந்த ஆண்டு, ஃபிலிம் பஜார் 2024 நவம்பர் 20 முதல் 24 வரை கோவாவில் உள்ள மேரியட் ரிசார்ட்டில் நடைபெறும்.

இந்த ஆண்டு அதிகாரபூர்வ தேர்வு இந்தி, ஆங்கிலம், அசாமி, தமிழ், மார்வாரி, பெங்காலி, மலையாளம், பஞ்சாபி, நேபாளி, மராத்தி, பஹாடி, கண்டோனீஸ் உள்ளிட்ட மொழிகளின் வளமான திரைபடங் களைக் கொண்டுள்ளது. ஃபிலிம் பஜாரில் இந்தியா, பங்களாதேஷ், நேபாளம், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஹாங்காங் ஆகிய நாடுகளைச் சேர்ந்த திரைப்படத் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், விழா நிகழ்ச்சியாளர்கள், நிதியாளர்கள், விற்பனை முகவர்கள் தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில் வல்லுநர்கள் தங்கள் திட்டங்களை வழங்குவார்கள்.

வளர்ந்து வரும் வலைத் தொடர்களின் பிரபலம் காரணமாக, NFDC நாடகம், காதல், நகைச்சுவை,  சாகசம் போன்ற பல்வேறு வகைகளில் எட்டு  திட்டங்களை தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகம் சேர்த்துள்ளது.

"திரைப்பட சந்தையின் ஒரு முக்கிய பகுதியாக இணை தயாரிப்பு சந்தை மாறியுள்ளது, தேர்ந்தெடுக்கப்பட்ட திட்டங்களுக்கு இது நிதி உதவி வழங்குகிறது. இந்த ஆண்டு, 23 நாடுகளில் இருந்து 30 மொழிகளில்  180 விண்ணப்பங்களை நாங்கள் பெற்றுள்ளோம். எங்கள் தொடக்க வலைத் தொடர் பதிப்பிற்கு, 14 மொழிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 8 நாடுகளில் இருந்து 38 விண்ணப்பங்கள் வந்தன. தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து திரைப்பட தயாரிப்பாளர்களும் தங்கள் திரைப்படங்களை தயாரிக்க சரியான இணை தயாரிப்பு கூட்டாளர்களைக் கண்டறிய  நல்வாழ்த்துக்கள்" என்று தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழக நிர்வாக இயக்குநர் திரு பிரிதுல் குமார் கூறியுள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2068120

***

SMB/RR/DL




(Release ID: 2068232) Visitor Counter : 26