தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
அமைப்புசாரா தொழிலாளர்களின் நலனுக்காக ஈஷ்ரம்-ஓரிடத்தீர்வு-ஐ டாக்டர் மன்சுக் மாண்டவியா அறிமுகப்படுத்தினார்
Posted On:
21 OCT 2024 4:44PM by PIB Chennai
மத்திய தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா "ஈஷ்ரம் – ஓரிடத் தீர்வு" தளத்தை புதுதில்லியில் இன்று தொடங்கி வைத்தார். மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர் செல்வி ஷோபா கரந்தலஜே, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் செயலாளர் மற்றும் மூத்த அதிகாரிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் பேசிய டாக்டர் மாண்டவியா, ஈஷ்ரம் போர்ட்டலில் வளர்ந்து வரும் நம்பிக்கையை வலியுறுத்தினார், "ஒவ்வொரு நாளும், சுமார் 60,000 முதல் 90,000 தொழிலாளர்கள் ஈஷ்ரம் தளத்தில் இணைகின்றனர், இது இந்த முயற்சியில் அவர்களின் நம்பிக்கையை நிரூபிக்கிறது. "ஈஷ்ரம் – ஓரிடத் தீர்வு திட்டம் ஈஷ்ரமில் பதிவு செய்துள்ள அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு பல்வேறு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் தடையற்ற அணுகலை வழங்கும் என்று அவர் கூறினார்.
அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான பதிவு செயல்முறையை எளிதாக்குவதும், அரசின் நலத்திட்டங்களை அவர்கள் அணுகுவதை எளிதாக்குவதும் ஈஷ்ரம் – ஓரிடத் தீர்வின் முதன்மை நோக்கம் என்றும் டாக்டர் மாண்டவியா எடுத்துரைத்தார். "இந்தத் தளம் ஒரு பாலமாக செயல்படும், அரசால் வழங்கப்படும் ஏராளமான நன்மைகளுடன் தொழிலாளர்களை இணைக்கும் மற்றும் பதிவு செயல்முறையை எளிதாகவும் வெளிப்படையாகவும் செய்யும்," என்று அவர் கூறினார்.
அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களும் இந்தத் தளத்தில் பதிவு செய்து தங்கள் நலனுக்காக வடிவமைக்கப்பட்ட பல்வேறு நலத்திட்டங்களைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு டாக்டர் மாண்டவியா கேட்டுக்கொண்டார். இந்த மேடையில் இணைவதன் மூலம், தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதையும் அவர்களின் நல்வாழ்வை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்ட அரசால் தொடங்கப்பட்ட பரந்த அளவிலான சமூக பாதுகாப்பு மற்றும் நலத் திட்டங்களை அணுக முடியும் என்று அவர் வலியுறுத்தினார்.
கடைசி மைல் இணைப்பை உறுதி செய்வதற்காக மாநில அரசின் இணைய தளத்தை ஈஷ்ரம் உடன் ஒருங்கிணைக்க வேண்டும் என்று செல்வி ஷோபா கரண்ட்லஜே வலியுறுத்தினார். மாநில / மாவட்ட வாரியாக விடுபட்ட சாத்தியமான பயனாளிகளை அடையாளம் காண்பதன் மூலம் திட்டங்களின் செறிவூட்டலை உறுதி செய்யவும் இந்த முயற்சி உதவும் என்று அவர் மேலும் கூறினார்.
அண்மையில் வெளியிடப்பட்ட பட்ஜெட் அறிவிப்பு மற்றும் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் 100 நாள் செயல்திட்டத்தின்படி பல்வேறு மத்திய அமைச்சகங்கள்/துறைகளின் தகவல்களை ஒருங்கிணைத்து ஒரே களஞ்சியமாக ஒருங்கிணைக்க ஒரே தீர்வு என்பது வழிவகை செய்கிறது. ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம், தேசிய சமூக உதவித் திட்டம், தேசிய வேலைவாய்ப்பு சேவை, பிரதமரின் ஷ்ரம் யோகி மந்தன் போன்ற முக்கிய நலத்திட்டங்கள் ஈஷ்ராம் உடன் ஒருங்கிணைக்கப்பட்டு, இதர நலத்திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் செயலாளர் திருமதி சுமிதா தவ்ரா, அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு பல்வேறு அரசு திட்டங்களை தடையின்றி அணுகுவதற்கு ஈஷ்ரம் – ஓரிடத் தீர்வு ஒரு வசதி செய்யும் என்று சுட்டிக்காட்டினார். ஈஷ்ரம் போர்ட்டலில் அனைத்து சமூகப் பாதுகாப்பு / நலத்திட்டங்களை ஒருங்கிணைக்கும் 'ஓரிடத் தீர்வு' என்ற தற்போதைய பயிற்சி தொடரும் என்று அவர் தெரிவித்தார்.
புதிய அரசு பதவியேற்ற முதல் 100 நாட்களில், சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள்/துறைகளுடன் பல்வேறு கூட்டங்கள் நடத்தப்பட்டு, அவற்றின் சமூகப் பாதுகாப்பு / நலத்திட்டங்களை ஈஷ்ரம் திட்டத்துடன் ஒருங்கிணைத்தோம். அமைப்புசாரா தொழிலாளர்களின் நலனுக்கான ஒட்டுமொத்த அரசின் அணுகுமுறைக்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டாகும்.
ஈஷ்ரம் போர்ட்டல் 26 ஆகஸ்ட் 2021 அன்று தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தால் தொடங்கப்பட்டது, மேலும் 3 வருட காலப்பகுதியில் 30 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள் ஏற்கனவே ஈஷ்ரமில் தங்களைப் பதிவு செய்துள்ளனர்.
***
PKV/KV/DL
(Release ID: 2066756)