மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
சிங்கப்பூர் பிரதமர் திரு லாரன்ஸ் வோங்குடன் திரு தர்மேந்திர பிரதான் சந்திப்பு: இந்தியாவும் சிங்கப்பூரும் 'திறமை, வளம் மற்றும் சந்தை' மூலம் கூட்டாண்மையை வலுப்படுத்துகின்றன
சிங்கப்பூருடன் வெளிநாட்டு உள்ளகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி ஒத்துழைப்புக்கு இந்தியக் கல்வி அமைச்சர் வலியுறுத்தல்
திரு தர்மேந்திர பிரதான் இந்தியா-சிங்கப்பூர் உறவுகளை வலுப்படுத்தி, கல்வி ஒத்துழைப்பு மற்றும் உள்ளகப் பயிற்சிக்கு களம் அமைத்தார்
பரஸ்பர முன்னுரிமைகளை முன்னெடுத்துச் செல்வதில் நம்பகமான அறிவுசார் கூட்டாளியாக சிங்கப்பூரை இந்தியா பார்க்கிறது – திரு. தர்மேந்திர பிரதான்
Posted On:
21 OCT 2024 2:46PM by PIB Chennai
மத்திய கல்வி அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான் சிங்கப்பூர் பிரதமர் திரு லாரன்ஸ் வோங்கை இன்று சந்தித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையே பள்ளிக் கல்வி, தொழிற்கல்வி மற்றும் ஆராய்ச்சி ஆகியவற்றில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது மற்றும் விரிவுபடுத்துவது குறித்து இருவரும் அர்த்தமுள்ள உரையாடல்களை நடத்தினர். 'திறமை, வளம் மற்றும் சந்தை' ஆகிய மூன்று முக்கிய தூண்கள் மூலம் கூட்டாண்மையை வலுப்படுத்துவது குறித்து இந்தக் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.
சிங்கப்பூரை ஒரு நம்பகமான, குறிப்பாக ஆழ்ந்த தொழில்நுட்பம், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மற்றும் புதுமைப் படைப்பு சுற்றுச்சூழல் அமைப்புகளை மேம்படுத்துவதில் அறிவுசார் கூட்டாளியாக இந்தியா கருதுகிறது என்று திரு தர்மேந்திர பிரதான் கூறினார்.
பிரதமர் திரு நரேந்திர மோடியும், பிரதமர் திரு வோங்கும் இந்தியா-சிங்கப்பூர் ஒத்துழைப்பை முக்கியமான மற்றும் வளர்ந்து வரும் துறைகளில் ஒத்துழைப்பு உட்பட விரிவான கூட்டாண்மையாக உயர்த்துவதற்கான வலுவான கட்டமைப்பை வலியுறுத்தியிருப்பதையும் திரு பிரதான் எடுத்துரைத்தார்.
முன்னதாக, சிங்கப்பூரின் கல்வி அமைச்சர் திரு சான் சுன் சிங்கை சந்தித்த திரு பிரதான், கல்வியின் பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து விவாதித்தார். இந்தியாவின் கல்வி முறையை சர்வதேசமயமாக்குவதில் தேசிய கல்விக் கொள்கை 2020-ன் முக்கியத்துவத்தை திரு பிரதான் வலியுறுத்தினார். இந்திய மாணவர்கள் சிங்கப்பூர் நிறுவனங்களில் நடைமுறை அனுபவத்தைப் பெற அனுமதிக்கும் வெளிநாட்டு உள்ளகப் பயிற்சி திட்டங்களுக்கான வழிகளை இரு அமைச்சர்களும் ஆராய்ந்தனர்.
இரு நாட்டு மாணவர்களுக்கிடையேயான கலாச்சாரத் தொடர்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், இந்தியா மற்றும் சிங்கப்பூரில் உள்ள பள்ளிகளை இணைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. ஆழ்ந்த தொழில்நுட்பம், மருத்துவம், மேம்பட்ட பொருட்கள் போன்ற பரஸ்பர ஆர்வமுள்ள துறைகளில் கூட்டு ஆராய்ச்சி ஒத்துழைப்பு குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இரு நாடுகளிலும் உள்ள பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை இணைப்பதன் மூலம் கல்வி மற்றும் ஆராய்ச்சி ஒத்துழைப்பை வளர்ப்பது குறித்தும் அவர்கள் விவாதித்தனர். பாடத்திட்ட மேம்பாடு, கற்பித்தல் முறை, ஆசிரியர்களின் திறன் மேம்பாடு போன்ற துறைகளில் சிங்கப்பூரின் தேசியக் கல்விக் கழகம் மற்றும் என்சிஇஆர்டி இடையேயான ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை திரு பிரதான் எடுத்துரைத்தார்.
இந்தியாவுக்கு வருகை தருமாறு அமைச்சர் சானுக்கு அழைப்பு விடுத்த திரு பிரதான், இரு நாடுகளுக்கும் இடையிலான பகிரப்பட்ட இலக்குகளை முன்னெடுத்துச் செல்வது மற்றும் கல்வி உறவுகளை மேம்படுத்துவது குறித்த தமது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தினார்.
இந்தியா-சிங்கப்பூர் அறிவுசார் கூட்டாண்மையை வலுப்படுத்துவது குறித்து விவாதிப்பதற்காக சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் திரு விவியன் பாலகிருஷ்ணனையும் திரு தர்மேந்திர பிரதான் சந்தித்தார்.
கல்வியில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தவும், பகிரப்பட்ட நோக்கங்களை அடைய கூட்டு முயற்சிகளை விரிவுபடுத்தவும் நெருக்கமாகப் பணியாற்றுவதன் முக்கியத்துவத்தை இரு தலைவர்களும் வலியுறுத்தினர்.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்திற்குச் சென்ற திரு பிரதான், பல்கலைக்கழகத் தலைவர் பேராசிரியர் டான் எங் சாய்-யைச் சந்தித்தார். அறிவு பாலங்களை உருவாக்குதல், கல்வி மற்றும் ஆராய்ச்சி ஒத்துழைப்புகளை வலுப்படுத்துதல் மற்றும் அனைத்து கல்வி முனைகளிலும் என்யுஎஸ் மற்றும் சிறந்த இந்திய உயர்கல்வி நிறுவனங்களுக்கு இடையிலான ஈடுபாடுகளை ஆழப்படுத்துதல் ஆகியவற்றில் நிரப்பு வலிமைகளை மேம்படுத்துவது குறித்து அவர்கள் விவாதித்தனர்.
வலுவான ஸ்டார்ட் அப்கள், சுகாதாரம், மேம்பட்ட பொருட்கள், டிஜிட்டல்மயமாக்கல் மற்றும் நிலைத்தன்மை போன்ற துறைகளில் மதிப்பை உருவாக்க என்யுஎஸ் மற்றும் இந்திய உயர் கல்வி நிறுவனங்கள் இணைந்து செயல்பட முடியும் என்று திரு பிரதான் வலியுறுத்தினார். இந்திய இளைஞர்களுக்கு தரமான உயர்கல்விக்கான அணுகலை மேம்படுத்துவதும், அதன் கல்வி முறையை சர்வதேசமயமாக்குவதும் தேசிய கல்விக் கொள்கை 2020 இன் முக்கிய கவனம் செலுத்தும் பகுதி என்றும் அமைச்சர் எடுத்துரைத்தார்.
2024 அக்டோபர் 20 அன்று தமது பயணத்தின் முதல் நாளில், திரு பிரதான் சிங்கப்பூரில் உள்ள புலம்பெயர்ந்த இந்திய உறுப்பினர்களுடன் கலந்துரையாடினார். இந்திய இளைஞர்களின் திறனை மேம்படுத்துவதில் தேசிய கல்விக் கொள்கை 2020-ன் பங்கையும், இந்தியாவில் கல்வியின் மகத்தான அளவையும் அவர் எடுத்துரைத்தார்.
அமைச்சரின் சிங்கப்பூர் பயணம், அதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு 2024 அக்டோபர் 20 முதல் 26 வரை மேற்கொள்ளும் பயணம், கல்வியில் பரஸ்பர ஆர்வமுள்ள முக்கியமான பகுதிகளில் ஒத்துழைப்பு, பங்கேற்பு மற்றும் ஒருங்கிணைப்பை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
********
PKV/KV/KR
(Release ID: 2066652)
(Release ID: 2066684)
Visitor Counter : 41