இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
விளையாட்டுத் துறையில் சிறப்பு இயக்கம் 4.0-ன் முன்னேற்றம்
प्रविष्टि तिथि:
21 OCT 2024 11:45AM by PIB Chennai
மத்திய நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையால் தொடங்கப்பட்ட சிறப்பு இயக்கம் 4.0, துாய்மையை நிறுவனமயமாக்கவும், அரசு அலுவலகங்களில் தேங்கியுள்ள கோப்புகள் மற்றும் மனுக்களுக்கு தீர்வு காணவும், அக்டோபர் 2 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதிவரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
விளையாட்டுத் துறையும் இந்தச் சிறப்பு இயக்கத்தை அக்டோபர் 2 ஆம் தேதி மேஜர் தியான்சந்த் மைதானத்தில் பிட் இந்தியா துாய்மை விடுதலை ஓட்டம் 5.0-வுடன் தொடங்கியது. இந்திய விளையாட்டு ஆணையம், தேசிய உடற்கல்வி நிறுவனம், தேசிய விளையாட்டு பல்கலைக் கழகம், தேசிய ஊக்கமருந்து முகமை, தேசிய ஊக்கமருந்து பரிசோதனை ஆய்வகம் ஆகியவற்றுடன் இணைந்து இந்தச் சிறப்பு இயக்கம் மேற்கொள்ளப்பட்டது.
கடந்த ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும், இந்த இயக்கம் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. முதல் கட்டம் செப்டம்பர் 16 ஆம் தேதி முதல் 30 ஆம் வரை நடைபெற்றது. இந்த ஆயத்தக் கட்டத்தில் நிலுவையில் உள்ள பிரச்சினைகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநில அரசுகள், மத்திய அரசின் அமைச்சகங்கள் ஆகியவற்றின் குறிப்புகள் கண்டறியப்பட்டன. துாய்மைப்படுத்துதல், அழகுப்படுத்துதல், மேம்படுத்துதல் ஆகியவை ஆயத்தக் கட்டத்தில் மேற்கொள்ளப்பட்டன.
அக்டோபர் 2 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதிவரை நடைபெறும் இரண்டாம் கட்டம், கண்டறியப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் கவனம் செலுத்துகிறது. முதல்கட்ட இயக்கத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் 15 குறிப்புகள், 2 நாடாளுமன்ற உறுதிமொழிகள், 30 பொதுமக்கள் குறைகள் ஆகியவை தீர்வுக்காக அடையாளம் காணப்பட்டன. கூடுதலாக 210 கோப்புகள், 220 மின்னணு கோப்புகள் ஆகியவை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதுதவிர துறையின் கீழ் 44 துாய்மை முகாம்கள் நடத்தப்பட்டன.
இரண்டாம் கட்டத்தில் முதல் இரண்டு வாரங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் 8 குறிப்புகள், 2 நாடாளுமன்ற உறுதிமொழிகள், பொதுமக்களின் 22 மனுக்கள் ஆகியவற்றுக்கு தீர்வு காணப்பட்டு முடித்து வைக்கப்பட்டன. கூடுதலாக 210 கோப்புகள், 130 மின்னணு கோப்புகள் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டு முடித்து வைக்கப்பட்டன.
வெளிப்புறத்தில் உள்ள 29 இடங்களில் துாய்மை இயக்கங்கள் நடத்தப்பட்டன. நிலுவையில் உள்ள அனைத்து விஷயங்களுக்கும் தீர்வு காண்பதை துறை உறுதியாக கொண்டுள்ளது. குறிப்பிட்ட சில இடங்கள் துாய்மைப்படுத்தப்பட்டு, அழகுப்படுத்தப்பட்டு பராமரிப்பது, இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும். பல்வேறு இடங்களில் உள்ள அலுவலக வளாகங்கள் இந்தச் சிறப்பு இயக்கத்தின்கீழ் துாய்மைப்படுத்தப்பட்டன.
***
PKV/KV/KR
(Release ID: 2066598)
(रिलीज़ आईडी: 2066616)
आगंतुक पटल : 78