தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அதிகரித்து வரும் இணையவழி மோசடிகளை சமாளிக்க "மோசடியைத் தவிர்த்தல்" இயக்கத்திற்காக அரசும், மெட்டாவும் இணைந்து செயல்படுகின்றன

Posted On: 17 OCT 2024 10:39PM by PIB Chennai

தகவல் ஒலிபரப்புத் துறை செயலாளர் திரு. சஞ்சய் ஜாஜு, புதுதில்லியில்  தேசிய பயனீட்டாளர் விழிப்புணர்வு இயக்கமான "மோசடியைத் தவிர்த்தலின்" தொடக்க விழாவில் முக்கிய உரையாற்றினார்.

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், உள்துறை அமைச்சகம், தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் மற்றும் இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் தொடங்கப்பட்ட மெட்டா நிறுவனத்தின் இந்த முயற்சி, இணையவழி மோசடிகளின் அதிகரித்து வரும் வழக்குகளை நிவர்த்தி செய்வதற்கான அரசின் உறுதிப்பாட்டுடன் இணைந்து, வளர்ந்து வரும் மோசடிகள் மற்றும் இணையவழி  மோசடிகளை எதிர்த்துப் போராடி, சைபர் பாதுகாப்பை மேம்படுத்துவதை  நோக்கமாகக் கொண்டுள்ளது.

மெட்டாவின் 'மோசடியைத் தவிர்த்தல்' பிரச்சாரத்திற்கு ஆதரவை வழங்கிய திரு சஞ்சய் ஜாஜு, இணையவழி மோசடிகளின் வளர்ந்து வரும் அச்சுறுத்தலிலிருந்து நமது குடிமக்களைப் பாதுகாப்பதற்காக சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட  மிகவும் அவசியமான நடவடிக்கை, இது என்று குறிப்பிட்டார். டிஜிட்டல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு கலாச்சாரத்தை வளர்ப்பதற்கான அரசின் முழு  அணுகுமுறையை இது பிரதிபலிக்கிறது.

900 மில்லியனுக்கும் அதிகமான இணைய பயனர்களைக் கொண்ட இந்தியா, டிஜிட்டல் இந்தியா முன்முயற்சியின் கீழ் அசாதாரண டிஜிட்டல் வளர்ச்சியைக் கண்டுள்ளது, யு.பி.ஐ பரிவர்த்தனைகளில் உலகளாவிய தலைமையாக மாறியுள்ளது என்பதை தகவல் மற்றும் ஒலிபரப்பு செயலாளர் எடுத்துரைத்தார்.

 

இருப்பினும், இந்த முன்னேற்றத்திற்கு இடையே இணையவழி  மோசடிகளும் அதிகரித்து வருகின்றன, 2023-இல் 1.1 மில்லியன் வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்த அச்சுறுத்தல்களை எதிர்த்துப் போராடவும், டிஜிட்டல் கல்வியறிவை மேம்படுத்தவும் வலுவான நடவடிக்கைகள் தேவை என்று இந்தியப் பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.

"மோசடியைத் தவிர்த்தல்"  ஒரு விழிப்புணர்வு இயக்கம்  மட்டுமல்ல என்று  செயலாளர் வலியுறுத்தினார். இதனால்,  தேசிய இயக்கமாக இருக்க முடியும், இந்திய குடிமக்களுக்கு இந்த அச்சுறுத்தல்களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான கருவிகள் மற்றும் அறிவை வழங்க முடியும். டிஜிட்டல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு கலாச்சாரத்தை உருவாக்க நமது இலக்கு எளிமையானது, ஆனால் சக்திவாய்ந்தது. "மெட்டாவின் உலகளாவிய நிபுணத்துவத்தை மேம்படுத்துவதன் மூலம், இந்தப் பிரச்சாரம் ஒவ்வொரு இந்தியருக்கும் இணைய அச்சுறுத்தல்களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள அதிகாரம் அளிக்கும், மேலும் நம் டிஜிட்டல் முன்னேற்றம் வலுவான டிஜிட்டல் பாதுகாப்புடன் பொருந்துவதை உறுதி செய்யும்" என்று அவர் மேலும் கூறினார்.

 

***

(Release ID: 2065959)

BR/RR/KR


(Release ID: 2065988) Visitor Counter : 72