நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
மத்திய அரசின் நுகர்வோர் விவகாரத் துறை, நாசிக்கிலிருந்து தில்லிக்கு ரயில் மூலம் வெங்காயத்தை அனுப்புகிறது
Posted On:
17 OCT 2024 2:31PM by PIB Chennai
மத்திய அரசின் நுகர்வோர் விவகாரத் துறை, இந்திய தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு நிறுவனம் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட 1,600 மெட்ரிக் டன் வெங்காயம் விலை நிலைப்படுத்துதல் நிதியின் கீழ் ரயில் மூலம் அனுப்புவதாக அறிவித்துள்ளது. நாசிக்கிலிருந்து தில்லி வரை விரைவு ரயில் மூலம் அனுப்புகிறது. இந்த வெங்காயம் 2024 அக்டோபர் 20-ம் தேதிக்குள் தில்லியை சென்று சேரும் என்றும், இது இந்த பண்டிகைக் காலத்தில் நுகர்வோருக்குப் போதுமான அளவு கிடைக்க வகை செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அரசின் நுகர்வோர் விவகாரத் துறை செயலாளர் திருமதி நிதி கரே, அடுத்த சில நாட்களில் லக்னோ மற்றும் வாரணாசிக்கு ரயில் மூலம் வெங்காயம் அனுப்பப்படவுள்ளதாக கூறினார். நியூ ஜல்பைகுரி(சிலிகுரி), திப்ருகர், நியூ தின்சுகியா, சங்சாரி உள்ளிட்ட வடகிழக்கு பிராந்தியத்தில் உள்ள பல இடங்களுக்கு வெங்காயத்தை நாசிக்கில் இருந்து கொண்டு செல்ல அனுமதிக்குமாறு இந்திய ரயில்வேயை நுகர்வோர் விவகாரத்துறை கேட்டுகொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
நடப்பாண்டில் இதுவரை விலை நிலைப்படுத்தலுக்காக, அரசு 4.7 லட்சம் டன் ரபி வெங்காயத்தை கொள்முதல் செய்து, 2024, செப்டம்பர் 5 முதல் கிலோவுக்கு ரூ.35-க்கு சில்லறை விற்பனை மூலமாகவும், நாடு முழுவதும் உள்ள முக்கிய மண்டிகளில் மொத்த விற்பனை மூலமாகவும் விடுவிக்கத் தொடங்கியது. இதுவரை சுமார் 92,000 மெட்ரிக் டன் வெங்காயம் நாசிக் மற்றும் பிற மையங்களில் இருந்து சாலை போக்குவரத்து மூலம் லாரிகளில் நுகர்வு மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2065722
***
IR/AG/KR
(Release ID: 2065747)