தேசிய மனித உரிமைகள் ஆணையம்
தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் 31-வது நிறுவன தினவிழாவில், குடியரசு துணைத்தலைவர் திரு ஜக்தீப் தன்கர் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்
Posted On:
16 OCT 2024 2:06PM by PIB Chennai
இந்தியாவின் தேசிய மனித உரிமைகள் ஆணையம், அதன் 31-வது நிறுவன தினத்தை 2024 அக்டோபர் 18 அன்று புதுதில்லி விஞ்ஞான் பவனில் கொண்டாட உள்ளது. இந்த விழாவில், குடியரசு துணைத்தலைவர் திரு ஜக்தீப் தன்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தற்காலிகத் தலைவர் திருமதி விஜயா பாரதி சயானி, தலைமைச் செயலாளர் திரு பரத் லால் உள்ளிட்ட ஆணையத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் தேசிய, சர்வதேச அளவிலான பிரதிநிதிகளும் பங்கேற்க உள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, ‘கட்டமைப்பு நடைமுறைகள் மதிப்பீடு, சட்டப் பாதுகாப்பு அம்சங்கள், பாதுகாப்பு உரிமைகள் மற்றும் இந்தியாவின் மூத்த குடிமக்களுக்கான அமைப்பு ரீதியான பாதுகாப்பு’ என்ற கருப்பொருளில் மூத்த குடிமக்களுக்கான உரிமைகள் குறித்த ஒரு நாள் தேசிய மாநாடும் நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்ச்சிகளைக் கீழ் காணும் யூட்யூப் முகவரியில் நேரலையில் காணலாம் https://www.youtube.com/watch?v=vzxbGV2pGGU and https://webcast.gov.in/nhrc
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2065282
----
MM/KPG/KR
(Release ID: 2065465)
Visitor Counter : 205