நிதி அமைச்சகம்
தேசிய மின்சாரத் திட்டத்தை (டிரான்ஸ்மிஷன்) தொடங்கி வைத்தார் மின்துறை அமைச்சர்
Posted On:
14 OCT 2024 6:10PM by PIB Chennai
2030-ம் ஆண்டளவில் 500 ஜிகாவாட் மீள்புதுப்பிக்கத்தக்க மின்உற்பத்தி நிறுவுதிறனையும் 2032-ம் ஆண்டுவாக்கில் 600 ஜிகாவாட் மீள்புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி நிறுவுதிறனையும் கடத்துவதை நோக்கமாகக் கொண்டு மத்திய மின்சார ஆணையம் பல்வேறு பங்குதாரர்களுடன் கலந்தாலோசித்து, விரிவான தேசிய மின்சாரத் திட்டத்தை (பரிமாற்றம்) தயாரித்தது. 2024 அக்டோபர் 14-15 தேதிகளில் புதுதில்லியில் மத்திய மின்சார ஆணையம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரண்டு நாள் மாநாட்டில், பல்வேறு பிரமுகர்கள் முன்னிலையில் மத்திய அமைச்சர் திரு மனோகர் லால் இதை தொடங்கி வைத்தார்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தியுடன் சேர்த்து உருவாக்கப்பட வேண்டிய 47 ஜிகாவாட் மின்கல சேமிப்பு அமைப்புகள் மற்றும் 31 ஜிகாவாட் நீரேற்று சேமிப்பு நிலையங்களின் தேவைகளையும் இத்திட்டம் கருத்தில் கொண்டுள்ளது. முந்த்ரா, கண்ட்லா, கோபால்பூர், பாரதீப், தூத்துக்குடி, விசாகப்பட்டினம், மங்களூரு போன்ற கடலோரப் பகுதிகளில் உள்ள பசுமை ஹைட்ரஜன் / பசுமை அம்மோனியா உற்பத்தி மையங்களுக்கு மின்சாரம் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
தேசிய மின்சாரத் திட்டத்தின்படி, 2022-23 முதல் 2031-32 வரையிலான பத்தாண்டு காலத்தில் (220 கிலோ வோல்ட் மற்றும் அதற்கு மேற்பட்ட மின்னழுத்த அளவில்) 1,91,000 ckm மின் பகிர்மான வழித்தடங்கள் மற்றும் 1270 GVA மாற்றும் திறன் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. கூடுதலாக, 33 ஜிகாவாட் எச்.வி.டி.சி இரு-துருவ இணைப்புகளும் திட்டமிடப்பட்டுள்ளன. பிராந்தியங்களுக்கு இடையேயான மின் பகிர்மானத் திறனை தற்போதுள்ள 119 ஜிகாவாட்டிலிருந்து 2027-ம் ஆண்டில் 143 ஜிகாவாட்டாகவும், 2032-ம் ஆண்டில் 168 ஜிகாவாட்டாகவும் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
நேபாளம், பூடான், மியான்மர், வங்கதேசம், இலங்கை நாடுகளுடனான எல்லை தாண்டிய தொடர்புகள் மற்றும் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற நாடுகளுடனான இடைத்தொடர்புகளையும் இந்த மின் தொடரமைப்புத் திட்டம் உள்ளடக்கியுள்ளது.
மின் தொடரமைப்புத் திட்டம், மின் தொடரமைப்புத் துறையில் புதிய தொழில்நுட்பங்களான கலப்பின துணை மின் நிலையங்கள், ஒற்றை துருவ கட்டமைப்புகள், இன்சுலேட்டட் கிராஸ் ஆர்ம்ஸ், டைனமிக் லைன் ரேட்டிங், உயர் செயல்திறன் கடத்திகள், அதிகபட்ச இயக்க மின்னழுத்தத்தை 1200 கிலோ வோல்ட் ஏசிக்கு தரம் உயர்த்துதல் மற்றும் மின் தொடரமைப்புத் துறையில் திறன் மேம்பாடு ஆகியவற்றை எடுத்துக்காட்டுகிறது.
பல மின் தொடரமைப்புத் திட்டங்கள் கட்டுமானத்தில் உள்ள நிலையில், பல மின் தொடரமைப்புத் திட்டங்கள் ஏலத்தில் உள்ளன மற்றும் பல மின் தொடரமைப்புத் திட்டங்கள் பைப்லைனில் உள்ளன. 2032-ம் ஆண்டு வரை மின் தொடரமைப்புத் துறையில் ரூ.9,15,000 கோடிக்கும் அதிகமான முதலீட்டு வாய்ப்பை முதலீட்டாளர்களுக்கு இந்த மின் பகிர்மானத் திட்டம் வழங்குகிறது.
***
MM/AG/DL
(Release ID: 2064797)
Visitor Counter : 45