பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமர் கதிசக்தி தேசியப் பெருந்திட்டத்தின் 3-வது ஆண்டுகளுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டு


இந்தியாவின் உள்கட்டமைப்பைப்  புரட்சிகரமாக்கும் நோக்கத்துடன் மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியாக பிரதமர் கதிசக்தி தேசியப் பெருந்திட்டம் உருவாக்கப்பட்டது: பிரதமர்

கதிசக்தியின் உதவியால், வளர்ச்சியடைந்த பாரதம் என்ற நமது தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்ற இந்தியா வேகத்தை அதிகரித்து வருகிறது: பிரதமர்

प्रविष्टि तिथि: 13 OCT 2024 10:32AM by PIB Chennai

 

பிரதமர் கதிசக்தி தேசியப் பெருந்திட்டத்தின் 3-வது ஆண்டு நிறைவடைவதற்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

மத்திய தொழில், வர்த்தகத் துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் பதிவையும் மை கவ் பதிவையும் பகிர்ந்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:

இந்தியாவின் உள்கட்டமைப்பைப்  புரட்சிகரமாக்கும் நோக்கத்துடன் மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியாக பிரதமர் கதிசக்தி தேசியப் பெருந்திட்டம் உருவாக்கப்பட்டது. இது பன்முக இணைப்பைக் கணிசமாக மேம்படுத்தியுள்ளது. துறைகளில் விரைவான, திறமையான வளர்ச்சியை இயக்குகிறது.

பல்வேறு பங்குதாரர்களின் தடையற்ற ஒருங்கிணைப்பு சரக்குப் போக்குவரத்தை அதிகரிக்கவும், தாமதங்களைக் குறைக்கவும், பலருக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கவும் வழிவகுத்தது.

" வளர்ச்சியடைந்த பாரதம் என்ற நமது தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்ற இந்தியா வேகத்தை அதிகரித்து வருவதற்காக கதிசக்திக்கு நன்றி. இது முன்னேற்றம், தொழில்முனைவு மற்றும் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும்."

 

*****

SMB/ KV

 

 

 


(रिलीज़ आईडी: 2064501) आगंतुक पटल : 174
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Marathi , Malayalam , English , Urdu , हिन्दी , Assamese , Bengali , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada