கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
மத்திய அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால் திப்ருகரில் ரிக்ஷா ஓட்டும் தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார்
प्रविष्टि तिथि:
08 OCT 2024 1:50PM by PIB Chennai
மத்திய துறைமுகங்கள், கப்பல், நீர்வழிகள் துறை அமைச்சர் சர்பானந்த சோனாவால் இன்று (08.10.2024) திப்ருகரில் ரிக்ஷா ஓட்டுநர்களுடனும், வண்டி ஓட்டும் தொழிலாளர்களுடனும் கலந்துரையாடினார்.
இந்த தொகுதியின் மக்களவை உறுப்பினரான அமைச்சர் திரு சர்பானந்தா சோனாவால் அப்போது பேசுகையில், பிரதமர் திரு நரேந்திர மோடி அரசின் நோக்கம் அனைவருக்கும் அதிகாரம் அளிப்பதும், அனைவருக்கும் சமமான வளர்ச்சியை உறுதி செய்வதும் ஆகும் என்று கூறினார். உள்ளூரில் கடினமாக உழைக்கும் மக்களால் உள்ளூர் பொருளாதாரம் சீராக உள்ளது என்று அவர் கூறினார். இந்த அழகான துர்கா பூஜை காலத்தில் தொழிலாளர்களைச் சந்திப்பது மகிழ்ச்சி அளிப்பதாக திரு சர்பானந்தா சோனாவால் தெரிவித்தார்.
***
(Release ID: 2063101)
PLM/RR/KR
(रिलीज़ आईडी: 2063120)
आगंतुक पटल : 99