குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

குடியரசுத் தலைவருடன் மாலத்தீவு அதிபர் சந்திப்பு

Posted On: 07 OCT 2024 9:28PM by PIB Chennai

குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு 07 அக்டோபர் 2024 அன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் மாலத்தீவு அதிபர் டாக்டர் முகமது முய்சுவை குடியரசுத் தலைவர் மாளிகையில் வரவேற்று பேச்சுநடத்தினார். மாலத்தீவு அதிபர் முய்சு, அந்நாட்டின் முதல் பெண்மணி சாஜிதா முகமது ஆகியோரை கௌரவிக்கும் வகையில் குடியரசுத் தலைவர் விருந்தளித்தார்.

 

குடியரசுத் தலைவர் மாளிகைக்கு சென்ற டாக்டர் முய்சுவை வரவேற்ற குடியரசுத் தலைவர், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் இந்தியாவின் நெருங்கிய நண்பராகவும், முக்கிய நட்பு நாடாகவும் மாலத்தீவு திகழ்கிறது என்றும், இந்தியாவின் 'அண்டை நாடுகளுக்கு முதலிடம்' என்ற கொள்கையிலும் கடல்சார் தொலைநோக்குத் திட்டத்தில் சிறப்பான இடத்தையும் மாலத்தீவு பெற்றுள்ளது என்றும் அவர் கூறினார்.

 

இந்தப் பயணத்தின்போது ஏற்றுக்கொள்ளப்பட்ட தொலைநோக்கு ஆவணம் இரு நாடுகளுக்கு இடையேயான நட்புறவு தரத்தை உயர்த்துவதுடன், விரிவான பொருளாதார, கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்கான தெளிவான பாதையை வழங்கும் என்று குடியரசுத் தலைவர் கூறினார்.

 

மாலத்தீவின் முன்னணி வர்த்தக ஒத்துழைப்பு நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது என்பதில் மகிழ்ச்சி தெரிவித்த குடியரசுத் தலைவர், டிஜிட்டல் பணப் பட்டுவாடா, இதர புதிய தொழில்நுட்பங்கள் துறையில் ஒத்துழைப்பை முன்னெடுத்துச் செல்வதற்கு நல்ல வாய்ப்புகள் உள்ளன என்று குறிப்பிட்டார். இருதரப்பு ஒத்துழைப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் இரு நாட்டு மக்களுக்கும் பயனளிக்கும் என்பதை இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.

***

(Release ID: 2062993)

PLM/RR/KR


(Release ID: 2063045) Visitor Counter : 37