புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

நீடித்த வளர்ச்சி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் இந்தியாவின் ஒத்துழைப்பை வலுப்படுத்த மத்திய அமைச்சர் திரு  பிரல்ஹாத் ஜோஷி ஜெர்மனிக்கு மூன்று நாள் பயணத்தை மேற்கொள்கிறார்

Posted On: 05 OCT 2024 1:59PM by PIB Chennai

 

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் நிலையான வளர்ச்சித் துறைகளில் இந்தியாவின் சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில், மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் ஸ்ரீ பிரல்ஹாத் ஜோஷி, நிலையான வளர்ச்சி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் இந்தியாவின் ஒத்துழைப்பை வலுப்படுத்த ஜெர்மனிக்கு மூன்று நாள் பயணத்தை நாளை மேற்கொள்கிறார்.

மத்திய அமைச்சர் ஜோஷிஅக்டோபர் 7 முதல் 8 வரை ஹம்பர்க் நிலைத்தன்மை மாநாட்டில் கலந்து கொள்வார். மேலும் ஜெர்மனி, இங்கிலாந்து அமைச்சர்கள் மற்றும் பிற மூத்த அதிகாரிகளுடன் தொடர்ச்சியான இருதரப்பு சந்திப்புகளையும் நடத்துவார், நிலையான வளர்ச்சி, பசுமை ஹைட்ரஜன், குறைந்த செலவு நிதி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மதிப்பு சங்கிலி கூறுகள் அனைத்திலும் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து ஆலோசனை நடத்துவார்.

பசுமை கப்பல் போக்குவரத்து குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டையும், இயக்கத் துறையை கார்பன் நீக்கம் செய்வதில் பசுமை ஹைட்ரஜனின் பங்கையும் அமைச்சர் மாநாட்டில் வலியுறுத்துவார். வர்த்தக வாய்ப்புகளை உருவாக்கவும், இந்தியாவிலும் உலகெங்கிலும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் விரிவாக்கத்தை விரைவுபடுத்தவும் இந்தியா-ஜெர்மனி உறவுகளை இந்தப் பயணம் அதிகரிக்கும். நீடித்த வளர்ச்சி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகியவற்றில் இந்தியாவின் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுவதுடன், உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள சர்வதேச கூட்டாண்மையை வளர்க்கும்.

இந்தியா-ஜெர்மனி இடையேயான இருதரப்பு உறவுகளுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி சிறப்பு முக்கியத்துவம் அளித்து வருகிறார். இந்தியா மற்றும் ஜெர்மனி தலைவர்கள் இடையேயான அரசுகளுக்கு இடையிலான ஆலோசனைகள் இந்தியாவில்  அக்டோபரில் நடைபெற உள்ளனசெப்டம்பரில் நடைபெற்ற RE-INVEST 2024-ன் போது, இரு நாடுகளும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல்களில் முதலீட்டுக்கான இந்தியா-ஜெர்மனி தளத்தை அறிமுகப்படுத்தின. அதிகரித்து வரும் மூலதன தேவையை பூர்த்தி செய்வதற்கு மேலும் வர்த்தக வாய்ப்புகள் மற்றும் புதிய வழிகளை உருவாக்கவும், தொழில்நுட்ப பரிமாற்றத்தை ஆதரிக்கவும், உலகளவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் புதுமையான தொழில்நுட்ப தீர்வுகளின் வளர்ச்சியை மேம்படுத்தவும் இந்த தளம் உதவும்.

2021 ஆம் ஆண்டில் 2030-ம் ஆண்டளவில் புதைபடிவ எரிபொருள் அடிப்படையிலான எரிசக்தி மூலங்களிலிருந்து 40 சதவீத ஒட்டுமொத்த மின்சார சக்தி நிறுவப்பட்ட திறன் என்ற என்டிசி இலக்கை இந்தியா அடைந்துள்ளது, இது திட்டமிடப்பட்டதற்கு ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னதாகவே உள்ளது. 2030 க்குள் புதைபடிவ எரிபொருள் அல்லாத மூலங்களிலிருந்து 50% ஒட்டுமொத்த மின்சார சக்தி நிறுவப்பட்ட திறனைஅடைவதற்கான என்டிசி இலக்கை அடையும் பாதையில் உள்ளது. இந்தியாவின் எரிசக்தி மாற்ற முயற்சிகள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் முதலீடு மற்றும் வேலை வாய்ப்புகளுக்கு வழிவகுக்கும். சர்வதேச சூரியசக்தி கூட்டணி உட்பட புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் மேம்பாடு மற்றும் பயன்பாட்டிற்கான சர்வதேச முயற்சிகளை இந்தியா முன்னெடுத்து வருகிறது. மேலும் நீடித்த மாநாட்டிற்கான இந்த விஜயம் உலகளாவிய எரிசக்தி மாற்றத்திற்கான இந்தியாவின் முயற்சிகளுக்கு மேலும் உத்வேகம் அளிக்கும் ..

*****

PKV/ KV

 

 



(Release ID: 2062484) Visitor Counter : 9