கூட்டுறவு அமைச்சகம்
அகமதாபாத் மாவட்ட கூட்டுறவு (ADC) வங்கியின் நூற்றாண்டு கொண்டாட்டத்தில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா பங்கேற்பு
Posted On:
04 OCT 2024 6:41PM by PIB Chennai
அகமதாபாத் மாவட்ட கூட்டுறவு (ஏ.டி.சி) வங்கியின் நூற்றாண்டு கொண்டாட்டத்தில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் திரு அமித் ஷா இன்று (4.10.2024) தலைமை விருந்தினராக பங்கேற்று உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில், குஜராத் முதலமைச்சர் திரு. பூபேந்திர படேல், மத்திய கூட்டுறவுத்துறைச் செயலாளர் டாக்டர் ஆஷிஷ் குமார் பூடானி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திரு அமித் ஷா தமது உரையில், ஒரு நிறுவனம், பல ஏற்றத் தாழ்வுகளைத் தாண்டி, நேர்மையுடன் 100 ஆண்டுகளை நிறைவு செய்யும் போது, அது அந்த நிறுவனத்திற்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த சமூகத்திற்கும் பெருமை சேர்க்கும் விஷயம் என்று கூறினார்.
1925-ம் ஆண்டில் நிறுவப்பட்ட அகமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கியின் 100 ஆண்டு பயணம், அகமதாபாத் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளின் செழிப்புக்கு ஒரு சான்றாகும் என்று அமைச்சர் குறிப்பிட்டார். தாஸ்க்ரோயில் ஒரு சிறிய நிறுவனமாகத் தொடங்கப்பட்ட இந்த வங்கி, இன்று ரூ.100 கோடி லாபம் ஈட்டி, நாட்டின் வலுவான மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் ஒன்றாக வளர்ந்துள்ளது என்று அவர் கூறினார்.
மக்களின் நல்வாழ்வு, கண்ணியம், மகிழ்ச்சி ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு கூட்டுறவு அமைப்புகள் செயல்படுவதாக அவர் தெரிவித்தார். 120 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் கூட்டுறவு இயக்கம் தொடங்கப்பட்டபோது, அதற்கு அளப்பரிய ஆற்றல் இருந்தது என்றும், இன்றும் அது உள்ளது என்றும் திரு அமித் ஷா கூறினார்.
கடந்த 70 ஆண்டுகளாக தேசிய அளவில் கூட்டுறவு அமைச்சகம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வந்ததையும் திரு அமித் ஷா குறிப்பிட்டார். ஆனால் பிரதமர் திரு நரேந்திர மோடி தான் கூட்டுறவு அமைச்சகத்தை நிறுவியதாக திரு அமித் ஷா குறிப்பிட்டார்.
குஜராத் உட்பட நாடு முழுவதும் 'கூட்டுறவு அமைப்புகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு' அதிகரிக்க வேண்டும் என்று அமைச்சர் திரு அமித் ஷா வலியுறுத்தினார்.
***
PLM/KPG/DL
(Release ID: 2062181)