குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

காந்தி ஜெயந்தியையொட்டி குடியரசுத் தலைவர் வாழ்த்து

Posted On: 01 OCT 2024 7:30PM by PIB Chennai

காந்தி ஜெயந்தியையொட்டி குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-

"தேசப்பிதா மகாத்மா காந்தியின் 155-வது பிறந்த நாளில், மக்கள் அனைவரின் சார்பாக எனது பணிவான மரியாதையைச் செலுத்துகிறேன்.

உண்மை மற்றும் அகிம்சையை  தீவிரமாக பின்பற்றிய அண்ணலின்  வாழ்க்கை என்பது ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் ஒரு தனித்துவமான செய்தி ஆகும். அமைதி மற்றும் ஒத்துழைப்பின் பாதையைப் பின்பற்ற நமக்கு அவர் ஊக்கமளித்தார். தீண்டாமை, கல்வியறிவின்மை, சுகாதாரமின்மை மற்றும் பிற சமூகத் தீமைகளை ஒழிப்பதற்கான பணிகளை காந்தியடிகள் மேற்கொண்டார், மேலும் பெண்கள் அதிகாரம் பெறுவதற்காக அயராமல் குரல் கொடுத்தார்.

காந்தியடிகள் நித்திய தார்மீக கொள்கைகளை உருவகப்படுத்தியதுடன், நெறிமுறை அடிப்படையிலான நன்நடத்தைக்காக போதனை செய்தார். அவரது போராட்டம் பலவீனமான மற்றும் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களை வலுப்படுத்துவதை மையமாகக் கொண்டது. அவரது கருத்துக்கள் உலகின் பல பெரிய ஆளுமைகள் மீது தாக்கத்தை ஏற்படுத்தின. அவர்கள் காந்தியடிகளின் கொள்கைகளை தங்கள் வழிமுறைகளில் ஏற்றுக்கொண்டனர்.

இந்த நன்னாளில், உண்மை, அகிம்சை, அன்பு, தூய்மை ஆகிய விழுமியங்களை உள்வாங்கவும், காந்தியடிகள் கனவு கண்ட இந்தியா என்ற சிந்தனையுடன், நாடு மற்றும் சமுதாயத்தின் வளர்ச்சியை தொடர்ந்து முன்னேற்றுவதற்கு பாடுபடவும் நாம் உறுதியேற்போம்.

***

PKV/AG/DL



(Release ID: 2060867) Visitor Counter : 25