சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

புதுதில்லியில் சர்வதேச முதியோர் தின நிகழ்ச்சி - மத்திய அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தலைமை தாங்குகிறார்

Posted On: 30 SEP 2024 11:26AM by PIB Chennai

இந்தியாவில் மூத்த குடிமக்களின் நலனை மேம்படுத்துவதில் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. புதுதில்லியில் நாளை (01.10.2024) நடைபெறும் சர்வதேச முதியோர் தினம் – 2024 கொண்டாட்டங்களில் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் கலந்து கொள்கிறார்.

மூத்த குடிமக்களின் பங்களிப்புகளை கௌரவிப்பதற்கும், அவர்களின் நலனை மேம்படுத்துவதற்கும் மாதம் முழுவதும் விரிவான தொடர்ச்சியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, பொதுமக்கள் மற்றும் பிற அரசு அமைப்புகள் இந்த செயல்பாட்டில் பங்கேற்பதும் ஊக்குவிக்கப்படும்.

2024 அக்டோபர் 1-ம் தேதி அன்று நடைபெறவிருக்கும் நிகழ்வுகள்

முக்கிய நிகழ்வான உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி புதுதில்லியில் உள்ள ஒரு கல்வி நிறுவனத்தில் நடத்தப்படும். மேலும் மூத்த குடிமக்களின் உதவிக்கான  சாதனங்கள் விநியோக்கப்படும்.

மூத்த குடிமக்களின் உரிமைகள், நல்வாழ்வு, ஆரோக்கியமான மற்றும் சுறுசுறுப்பான முதுமையின் முக்கியத்துவம் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து தேசிய சமூகப் பாதுகாப்பு நிறுவனத்தால் (என்.ஐ.எஸ்.டி) அக்டோபர் 16-ம் தேதி பேச்சுத் தொடர் தொடங்கப்படும்.

வினாடி வினா மற்றும் உறுதிமொழி பிரச்சாரமும் நடைபெறும்

சமூகத்தில் உள்ள மூத்த குடிமக்களுக்கு கண்ணியம், மரியாதை மற்றும் நலனை உறுதி செய்யும் நோக்கத்திற்காக சமூகத்தில் உள்ளோர் குறிப்பாக இளைஞர்கிளடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த விநாடி வினா நிகழ்ச்சி நடத்தப்படும்.

மைகவ் என்ற இணையதளம் சமூகத்தில் உள்ள மூத்த குடிமக்களின் மரியாதை மற்றும் நலனை உறுதி செய்வதற்கு பொது மக்களுக்கு அழைப்பு விடுக்கும் 

மூத்த குடிமக்களுக்கான நல இணையதளம் விரைவில் தொடங்கப்படும்.

அக்டோபர் 24 அன்று 'அழகான வயதைக் கொண்டாடுதல்: வாழ்க்கை 60 வயதில் தொடங்குகிறது' என்ற தலைப்பில் கலாச்சார நிகழ்ச்சி, 70 வயதான கலைஞர்களின் செயல்திறனைக்  காட்சிப்படுத்தப்படும்.

ஒரு மாத கால கொண்டாட்டம் புதுதில்லியில் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சியோடு நிறைவுபெறும்.

---

(Release ID 2060190)

LKS/KPG/RR



(Release ID: 2060248) Visitor Counter : 24