பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய ஊட்டச்சத்து மாத நிறைவு நிகழ்ச்சி - ராஞ்சியில் நாளை பங்கேற்கிறார் மத்திய மகளிர், குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி

प्रविष्टि तिथि: 29 SEP 2024 10:07AM by PIB Chennai

 

7-வது தேசிய ஊட்டச்சத்து மாதத்தின் (ராஷ்டிரிய போஷன் மா) நிறைவு நிகழ்ச்சி நாளை (2024 செப்டம்பர் 30) ராஞ்சியில் உள்ள ஷௌர்யா சபாகாரில் ஜார்க்கண்ட் ஆளுநர் ஸ்ரீ சந்தோஷ் கங்வார் முன்னிலையில் நடைபெறுகிறது. இதில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி பங்கேற்கிறார்மத்திய அரசின் பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சக அதிகாரிகள், ஜார்க்கண்ட் மாநில அரசின் உயர் அதிகாரிகளும் இதில் கலந்து கொள்கின்றனர்.

7 வது தேசிய ஊட்டச்சத்து மாதம், 2024 செப்டம்பர் 1-ம் தேதி முதல் 30- ம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறதுஇந்த ஊட்டச்சத்து மாதத்தில் இதுவரை சுமார் 12 கோடி நடவடிக்கைகள் பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் நடத்தப்பட்டுள்ளன.

ஊட்டச்சத்து மாதம்,

ஆரோக்கியமான மற்றும் ஊட்டச்சத்துமிக்க இந்தியாவை நோக்கிய கூட்டு முயற்சிகளைக் கொண்டாடுகிறதுமத்திய அமைச்சர் பங்கேற்கும் நிறைவு நிகழ்வு https://webcast.gov.in/mwcd என்ற இணையதள இணைப்பு மூலம் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படும்.

*****

PLM/ KV

 

 


(रिलीज़ आईडी: 2060051) आगंतुक पटल : 102
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Gujarati , Kannada , Malayalam