வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அரசின் 100 நாள் கொண்டாட்டத்தையொட்டி ஜெம் பரிவர்த்தனை கட்டணங்களை  வெகுவாகக் குறைத்துள்ளது

Posted On: 21 SEP 2024 1:53PM by PIB Chennai

 

எளிதாக வர்த்தகம் செய்வதை ஊக்குவித்தல் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதாரத்தை உருவாக்குதல் என்ற மத்திய அரசின் தற்போதைய உறுதிப்பாட்டுடன் இணைந்து, அரசு மின்னணு சந்தை (GeM) சமீபத்தில் அதன் தளத்தில் பரிவர்த்தனை செய்யும் விற்பனையாளர்கள் / சேவை வழங்குநர்களுக்கு விதிக்கப்படும் பரிவர்த்தனை கட்டணங்களில் குறிப்பிடத்தக்க அளவு குறைப்பை அறிவித்துள்ளது. இந்த துணிச்சலான நடவடிக்கை அரசின் 100 நாள் முயற்சியின் ஒரு பகுதியாகும். அதன்படி, ஜிஇஎம் போர்ட்டலின் புதிய வருவாய் கொள்கையை அறிவித்துள்ளது, இது ஆகஸ்ட் 9 முதல் நடைமுறைக்கு வந்தது.

இந்தக் கொள்கையின்படி:

முந்தைய ஆர்டர் மதிப்பு உச்சவரம்பு ரூ  5 லட்சத்திற்கு மாறாக,

ரூ 10 லட்சம் வரை மதிப்புள்ள அனைத்து ஆர்டர்களும் இப்போது பூஜ்ஜிய பரிவர்த்தனை கட்டணங்களை ஈர்க்கும்,

ரூ 10 லட்சத்திற்கு மேல் ரூ 10 கோடி வரையிலான ஆர்டர்களுக்கு மொத்த ஆர்டர் மதிப்பில் 0.30% மதிப்புள்ள பரிவர்த்தனை கட்டணங்கள் விதிக்கப்படும், முந்தைய பரிவர்த்தனை கட்டணங்கள் 0.45% ஆகும் .

ரூ .10 கோடிக்கு மேல் ஆர்டர்கள் இப்போது ரூ 3 லட்சம் என்னும்  கட்டணமாக உள்ளதுஇது முன்பு ரூ 72.5 லட்சம் என்ற உச்சவரம்பு கட்டணத்திலிருந்து  வெகுவாக குறைக்கப்படுகிறது.

ஜிஇஎம்-ல் கிட்டத்தட்ட 97% பரிவர்த்தனைகள் பூஜ்ஜிய பரிவர்த்தனை கட்டணங்களை ஈர்க்கும், மீதமுள்ளவை பெயரளவு கட்டணம் @ 0.30% ரூ 10 லட்சத்திற்கு மேல் ஆர்டர் மதிப்பில் அதிகபட்சம் ரூ 3 லட்சம் மட்டுமே. ஆர்டரின் அளவைப் பொருட்படுத்தாமல். அரசு மின்னணு சந்தை மூலம் எளிதாக வர்த்தகம் செய்வதில் இந்த நடவடிக்கை ஒரு திருப்புமுனை தருணமாகும். பரிவர்த்தனைகளுக்கான செலவைக் குறைக்க வேண்டும் என்ற அரசின் உறுதிப்பாட்டுடன் இது ஒத்துப்போகிறது. அரசு மின்னணு சந்தை தனது பரிவர்த்தனைக் கட்டணத்தை ஒரே முயற்சியில் 33 சதவீதத்திலிருந்து 96 சதவீதம் வரை குறைத்துள்ளது. இது அரசு மின்னணு சந்தை விற்பனையாளர்கள் / சேவை அளிப்பவர்கள் போட்டித்தன்மையுடன் செயல்பட பெரிதும் பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..

*****

PKV / KV

 

 


(Release ID: 2059951) Visitor Counter : 25