பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

ஜப்பான் பிரதமருடன் பிரதமர் திரு நரேந்திர மோடி சந்திப்பு

Posted On: 22 SEP 2024 5:55AM by PIB Chennai

அமெரிக்காவின் டெலாவேரில் உள்ள வில்மிங்டனில் நடைபெற்ற குவாட் தலைவர்களின் உச்சிமாநாட்டின் இடையே, ஜப்பான் பிரதமர் மேதகு திரு. ஃபுமியோ கிஷிடாவை பிரதமர் திரு. நரேந்திர மோடி செப்டம்பர் 21, 2024 அன்று சந்தித்துப் பேசினார்.

 மார்ச் 2022-இல் நடைபெற்ற முதலாவது வருடாந்திர உச்சிமாநாட்டிற்குப் பிறகு தாங்கள் மேற்கொண்ட பல்வேறு கலந்துரையாடல்களை இரு பிரதமர்களும் நினைவு கூர்ந்தனர். கடந்த சில ஆண்டுகளாக இந்திய-ஜப்பான் நாடுகளுக்கிடையேயான சிறப்பு உத்திசார்ந்த மற்றும் உலகளாவிய கூட்டாண்மையை முன்னேற்ற வைப்பதில் தளராத அர்ப்பணிப்பு மற்றும் தலைமைப் பண்புடன் செயல்படும் பிரதமர் திரு கிஷிடாவுக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார்.

இந்திய-ஜப்பான் இடையேயான சிறப்பு உத்திசார் மற்றும் உலகளாவிய கூட்டாண்மை 10-வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருப்பதைக் குறிப்பிட்ட இரு தலைவர்களும், இந்த உறவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து திருப்தி தெரிவித்தனர்இரு நாடுகளுக்கும் இடையிலான பன்முக உறவுகளை ஆய்வு செய்து, பாதுகாப்பு உறவுகளுடன்வர்த்தகங்கள் மற்றும் மக்களுக்கு இடையேயான ஒத்துழைப்பை மேலும் ஆழப்படுத்துவதற்கான கருத்துக்களை இரு பிரதமர்களும் பரிமாறிக் கொண்டனர்.

பிரதமர் திரு  கிஷிடாவுக்கு பிரியாவிடை கொடுத்த பிரதமர், அவரது எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்..

*****

BR/ KV/DL



(Release ID: 2059162) Visitor Counter : 6