தேர்தல் ஆணையம்
azadi ka amrit mahotsav

ஜம்மு காஷ்மீர் 2-ம் கட்ட தேர்தலில் இரவு 11.45 மணி நிலவரப்படி 57.03 சதவீத வாக்குப்பதிவு

Posted On: 26 SEP 2024 4:42AM by PIB Chennai

ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைக்கு 2-ம் கட்டமாக நேற்று நடைபெற்ற தேர்தலில் இரவு 11.45 மணி நிலவரப்படி, சுமார் 57.03 சதவீதம்  வாக்குகள் பதிவானதாக பல்வேறு மாவட்டங்களிலிருந்து பெறப்பட்ட  தரவுகள் தெரிவிக்கின்றன.

பட்காம் மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளில் 62.98 சதவீத வாக்குகளும், காண்டர்பால் மாவட்டத்தில் உள்ள 2 தொகுதிகளில் 62.51  சதவீத வாக்குகளும், பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளில் 73.80 சதவீத வாக்குகளும்,  ரஜோரி மாவட்டத்தில் உள்ள  5 தொகுதிகளில் 70.95 சதவீத வாக்குகளும், ரீசி மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளில் 74.70 சதவீத வாக்குகளும், ஸ்ரீநகர் மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் 29.81 சதவீத வாக்குகளும் பதிவானதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

இது ஒரு தோராயமான  வாக்குப்பதிவு விவரமாகும். சில வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு விவரங்கள் முழுமையாக வந்தவுடன் வாக்குப்பதிவு இறுதி நிலவரம் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.  

***

PKV/RS/KV


(Release ID: 2058911) Visitor Counter : 48