குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
பண்டிட் தீன்தயாள் உபாத்யாயாவின் தத்துவம் மற்றும் சிந்தனைகளின் காலத்தால் அழியாத பொருத்தத்தை குடியரசு துணைத்தலைவர் எடுத்துரைத்தார்
Posted On:
25 SEP 2024 6:31PM by PIB Chennai
பண்டிட் தீன்தயாள் உபாத்யாயாவின் 108-வது பிறந்த நாளை நினைவுகூரும் வகையில், சிகாரில் உள்ள பண்டிட் தீன்தயாள் உபாத்யாய ஷேக்ஹாவதி பல்கலைக்கழகத்தில் "பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா" சிலையை குடியரசு துணைத்தலைவர் திரு ஜக்தீப் தன்கர் இன்று திறந்து வைத்தார். "பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா சமிதி உத்யான்" தொடக்க விழாவையும் இந்த நிகழ்ச்சி குறித்தது. இது இந்தியாவின் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவர்களில் ஒருவரின் பாரம்பரியத்திற்கான உறுதிப்பாட்டைப் பிரதிபலிக்கிறது.
குடியரசு துணைத்தலைவர் தன்கர் தனது உரையில், பண்டிட் தீன்தயாளின் தத்துவத்தின் சமகால பொருத்தத்தை எடுத்துரைத்தார், "இங்கு இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நான் அழைப்பைப் பெற்றபோது, இன்று நான் காணும் விஷயங்களின் முக்கியத்துவத்தை இயல்பாகவே நான் கற்பனை செய்யவில்லை. என் மனதில் ஒரு பெரிய மனிதரின் பெயர் மட்டுமே இருந்தது.
இன்று, அவரது போதனைகளின் சாராம்சத்தை நான் உணர்கிறேன்.
பண்டிட் தீனதயாள் சிலையை திறந்து வைக்கும் கவுரவம் குறித்து பேசிய குடியரசுத் துணைத் தலைவர், "பண்டிட் தீன்தயாள் உபாத்யாயாவின் சிலையை திறந்து வைப்பேன் என்று நான் ஒருபோதும் நினைத்துப் பார்த்ததில்லை. குறிப்பாக அவரது பிறந்த நாளில் இது ஒரு பெரிய பாக்கியம் வாய்ந்த தருணம். அவரது தத்துவத்துடனான தனது தொடர்பை நினைவு கூர்ந்த அவர், உபாத்யாயாவின் போதனைகளால் ஈர்க்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்தார், "அவரது இலட்சியங்களும் எண்ணங்களும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. பண்டிட் அவர்களைப் பற்றி நாம் விரிவாகக் கற்றுக் கொள்ள வேண்டும், அவரது தத்துவத்தை நமது வாழ்க்கையில் பின்பற்ற முயற்சிக்க வேண்டும்" என்று அவர் குறிப்பிட்டார்.
தீன்தயாள் உபாத்யாயாவின் போதனைகளின் உருமாறும் தாக்கத்தை வலியுறுத்திய அவர், "தனிநபர் வளர்ச்சியில் அவரது கவனம் இருந்தது, சமூகத்தின் ஒருங்கிணைந்த பகுதிகளாக மாற தனிநபர்களுக்கு அதிகாரம் அளித்தது" என்றார். சமூகத்தில் கடைசி நபரின் தேவைகளை நிறைவேற்றுவதன் முக்கியத்துவத்தை அவர் சுட்டிக்காட்டினார். இது மிகவும் ஒடுக்கப்பட்ட தனிநபர்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட அந்த்யோதயா என்ற கருத்தில் இணைக்கப்பட்டுள்ளது.
தாயின் பெயரில் மரக்கன்றுகளை நடும் பிரதமரின் முயற்சியில் பங்கேற்குமாறு, மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பங்கேற்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில், கூட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திரு தன்கர் அழைப்பு விடுத்தார். "ஒருவரின் தாயின் பெயரில் மரக்கன்றுகளை நடவு செய்வது ஆழமான தொடர்பைத் தூண்டுகிறது. இந்த அறுபது ஏக்கர் வளாகத்திற்குள் மரங்களை நட்டு, விவசாய நிறுவனங்களின் வழிகாட்டுதலுடன் அவற்றைப் பராமரிக்குமாறு இங்குள்ள அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.
"இன்று, தங்கள் பிறந்த நாட்களைப் பகிர்ந்து கொள்ளும் இரண்டு தொலைநோக்கு தலைவர்களை நான் நினைவுபடுத்துகிறேன். பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா மற்றும் சவுத்ரி தேவி லால் ஆகிய இருவரும் தன்னலமற்ற சிந்தனையாளர்கள், அவர்கள் சமூகத்திற்கு சேவையாற்றுவதற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்கள்" என்றும் அவர் கூறினார். புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் உத்வேக மையத்தில் உள்ள சவுத்ரி தேவி லாலின் சிலையைப் பார்வையிட்டது ஆழமான தொடர்பை ஏற்படுத்தியதாக அவர் குறிப்பிட்டார். முன்னாள் துணைப் பிரதமரான தேவி லால் தன்னை அரசியலுக்கு எவ்வாறு வழிநடத்தினார் என்பதை நினைவுகூர்ந்தார்.
இந்தியா கடுமையாகப் போராடிப் பெற்ற சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய குடியரசு துணைத்தலைவர், நெருக்கடி நிலையிலிருந்து நாம் கற்றுக்கொண்ட படிப்பினைகளை இளைஞர்கள் சிந்திக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். "பெரும் போராட்டத்தின் மூலம் அடையப்பட்ட இந்தியாவின் சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை நாம் அங்கீகரிக்க வேண்டும். 'சம்விதான் ஹத்யா திவாஸ்' ஒரு தனிநபரால் நமது உரிமைகள் எவ்வாறு குறைத்து மதிப்பிடப்பட்டது என்பதையும், அவரது பதவியைப் பாதுகாக்க அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது, இது உரிமைகள் மறுக்கப்படுவதற்கு வழிவகுத்தது என்பதையும் நமக்கு நினைவூட்டுகிறது.
இறுதியாக, பாரம்பரிய பாதைகளுக்கு அப்பாற்பட்ட வாய்ப்புகளை ஏற்குமாறு இளைஞர்களை ஊக்குவித்த குடியரசு துணைத்தலைவர், "ஒருபோதும் தோல்விக்கு அஞ்சாதீர்கள்; இது எந்தவொரு முயற்சியின் இயல்பான பகுதியாகும். உங்கள் வாய்ப்பு விரிவடைகிறது.
இன்று, முதலீடு மற்றும் வாய்ப்புகளுக்கான விருப்பமான இடமாக இந்தியா பார்க்கப்படுகிறது, இதற்கு அரசாங்க வேலைகள் மட்டுமல்ல, வாய்ப்புகளின் பரந்த அடிவானமும் காரணமாகும்" என்று அவர் குறிப்பிட்டார்.
ராஜஸ்தான் ஆளுநர் திரு ஹரிபாவ் பாக்டே, ராஜஸ்தான் துணை முதலமைச்சர் டாக்டர் பிரேம் சந்த் பைர்வா, பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா ஷெகாவதி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் (டாக்டர்) அனில் குமார் ராய் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
****
MM/KPG/DL
(Release ID: 2058752)
Visitor Counter : 34