ஆயுஷ்
azadi ka amrit mahotsav

நாடு முழுவதும் 500-க்கும் மேற்பட்ட செயல்பாடுகளுடன் ஆயுஷ் தூய்மையே சேவை இயக்கம் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது

Posted On: 24 SEP 2024 4:59PM by PIB Chennai

ஆயுஷ் அமைச்சகம், நாடு முழுவதும் உள்ள அதன் குழுமங்கள் மற்றும் நிறுவனங்களுடன் சேர்ந்து, 'தூய்மையே சேவை' இயக்கத்தின் கீழ் நாடு முழுவதும்502 நடவடிக்கைகளைத் தொடங்கியது. இந்த 15 நாள் இயக்கம் 2024, செப்டம்பர் 17 அன்று தொடங்கப்பட்டது. இது அக்டோபர் 1, 2024 வரை தொடரும். தூய்மை மக்கள் பங்கேற்பின் கீழ், பொதுமக்கள்பங்கேற்பை வலியுறுத்தி, விழிப்புணர்வை அதிகரித்து, தூய்மையை பகிரப்பட்ட பொறுப்பாக மாற்றி, இதுவரை 227 செயல்பாடுகளை அமைச்சகம் உருவாக்கியுள்ளது. புறக்கணிக்கப்பட்ட பகுதிகளில் தூய்மை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதை நோக்கமாகக் கொண்ட 90 நடவடிக்கைகளை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது. தூய்மைப் பணியாளர்கள்  பாதுகாப்பு நிகழ்வுடன் 185 நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நடவடிக்கைகள் தூய்மைப் பணித் தொழிலாளர்களின் வேலை மற்றும் சுகாதார நிலைமைகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகின்றன.

ஆயுஷ் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு. பிரதாப்ராவ் ஜாதவ், "தூய்மை என்பது ஒரு கடமை மட்டுமல்ல, நமது நாட்டிற்கான அர்ப்பணிப்பு. ஒவ்வொரு செயலிலும் தூய்மையை ஏற்றுக்கொள்வதன் மூலம், ஆரோக்கியமான, வலிமையான இந்தியாவை உருவாக்கும் சக்தி ஒவ்வொரு குடிமகனுக்கும் உள்ளது. தூய்மையே சேவை இயக்கத்தின் மூலம் எதிர்கால சந்ததியினருக்காக இந்தியாவை தூய்மையானதாகவும், பசுமையானதாகவும், ஆரோக்கியமானதாகவும் மாற்ற நாம் ஒன்றிணைவோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

நாடு முழுவதும் தூய்மை மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் ஜல் சக்தி அமைச்சகம் ஆகியவற்றின் ஆதரவுடன் தொடங்கப்பட்ட இயக்கத்துடன் ஆயுஷ் அமைச்சகம் வெற்றிகரமாக இயங்கி வருகிறது.

******

IR/KPG/KR/DL


(Release ID: 2058328)