சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் 100 நாள் இலக்கை எட்டியது

Posted On: 23 SEP 2024 2:05PM by PIB Chennai

மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் தில்லி ஐஐடி-யில் ஜூலை 29-ந் தேதி Ideas4LiFE இணையதளத்தை தொடங்கி வைத்தார். சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறைகள் தொடர்பான நடைமுறை மாற்றங்கள் குறித்த ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களை தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.

யுனிசெப், யுவா ஆகியவற்றின் கூட்டாண்மையுடன் இந்த இணையதளம் உருவாக்கப்பட்டது. ஆன்-லைன் மூலம் பங்கேற்பவர்கள் தங்களது ஆலோசனைகளையும், கருத்துக்களையும் தெரிவிக்க அனுமதிக்கப்படுவார்கள். லைப் இயக்கத்தின் 7 கருப்பொருள்கள் குறித்த சிறந்த யோசனைக்கு பரிசுகள் வழங்கப்படும்.

மகாராஷ்டிர மாநில சுற்றுச்சூழல் துறையுடன் இணைந்து பம்பாய் ஐஐடியில் கடந்த ஆகஸ்ட் மாதம் 31-ந் தேதி புதுமையான சுற்றுச்சூழல் தீர்வுகளை வரவேற்பதை நோக்கமாக கொண்டு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் ஆலோசனைகளை சமர்ப்பிக்க செப்டம்பர் 15-லிருந்து அக்டோபர் 15 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.

அமைச்சகத்தின் Ideas4LiFE முன்முயற்சிக்கு சமூக ஊடகங்கள் மூலம் இதுவரை 3,300 பதிவுகள் செய்யப்பட்டுள்ளன. சுமார் 1000 ஆலோசனைகள் பெறப்பட்டுள்ளன.

***

(Release ID: 2057810)
PKV/RR/KR



(Release ID: 2057852) Visitor Counter : 20