தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

ஆகஸ்ட் மாதத்திற்கான விவசாய மற்றும் கிராமப்புற தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்கள் வெளியீடு

Posted On: 20 SEP 2024 2:02PM by PIB Chennai

விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புறத் தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீடு (அடிப்படை: 1986-87=100) ஆகஸ்ட் 2024-ல் தலா 7 புள்ளிகள் அதிகரித்து, முறையே 1297 மற்றும் 1309 நிலைகளை எட்டியது.
ஆகஸ்ட் மாதத்திற்கான விவசாயத் தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டு அடிப்படையில் ஆண்டு பணவீக்க விகிதம் 5.96%- ஆக இருந்தது. 2023 ஆகஸ்டில் இது 7.37%-ஆக இருந்தது. ஆகஸ்ட் மாதத்திற்கான விவசாயத் தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டு அடிப்படையில் ஆண்டு பணவீக்க விகிதம் 6.08% -ஆக இருந்தது. இது ஆகஸ்ட் 2023-ல், 7.12%-ஆக இருந்தது. 
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2056958

************

PLM/RS/KV
 



(Release ID: 2057074) Visitor Counter : 25


Read this release in: English , Urdu , Marathi , Hindi