பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் இந்தியா தற்போது உகந்த பாதுகாப்பு கூட்டாளியாக பார்க்கப்படுகிறது; அமைதி மற்றும் வளத்தை ஊக்குவிப்பதில் கடற்படை முக்கிய பங்கு வகிக்கிறது: பாதுகாப்பு அமைச்சர்

Posted On: 19 SEP 2024 3:31PM by PIB Chennai

2024, செப்டம்பர் 19 அன்று புதுதில்லியில் நடைபெற்ற இரண்டாவது கடற்படை தளபதிகள் மாநாடு '24-ல் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் உரையாற்றினார்.  இந்தியப் பெருங்கடலில் அமைதி மற்றும் வளத்தை ஊக்குவிப்பதில் முக்கிய பங்காற்றியதற்காக இந்திய கடற்படையை பாராட்டிய அவர், பொருளாதார, புவிசார் அரசியல், வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களைக் கருத்தில் கொண்டு இந்த பிராந்தியம் மதிப்புமிக்கதுடன் உணர்வுப்பூர்வமானது என்று குறிப்பிட்டார்.

இந்தியா ஒரு காலத்தில் கடலோரங்களுடன் நிலத்தால் சூழப்பட்ட நாடாக இருந்தது. ஆனால் இப்போது நில எல்லைகளைக் கொண்ட ஒரு தீவு நாடாகக் காண முடியும் என்று சுட்டிக்காட்டிய பாதுகாப்புத் துறை அமைச்சர், நாட்டின் கடல்சார் நலன்களைப் பாதுகாப்பதில் இந்திய கடற்படையின் தயார்நிலையை பாராட்டினார்.

"உலக வர்த்தகத்தின் பெரும்பகுதி இப்பகுதி வழியாக செல்கிறது, இது மதிப்புமிக்கதாக ஆக்குகிறது. அதே நேரத்தில், கடற்கொள்ளை, கடத்தல், ட்ரோன் தாக்குதல்கள், ஏவுகணை தாக்குதல்கள் மற்றும் கடலில் கடல் கேபிள் இணைப்புகளை சீர்குலைப்பது போன்ற சம்பவங்கள் அதை மிகவும் பொறுப்பு வாய்ந்ததாக ஆக்குகின்றன என்று குறிப்பிட்டார்.

இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள அனைத்து பங்குதாரர் நாடுகளின் பொருளாதார நலன்களைப் பாதுகாப்பதிலும், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் சரக்குகளின் சுமூகமான நகர்விலும் நமது கடற்படை குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்துள்ளது. அதன் கடற்படை கொள்ளை எதிர்ப்பு நடவடிக்கைகள் இந்தியாவில் மட்டுமல்ல, உலக அளவிலும் பாராட்டுக்களைப் பெற்று வருகின்றன. இந்த ஒட்டுமொத்த பிராந்தியத்திலும் இந்தியா இப்போது ஒரு உகந்த பாதுகாப்பு கூட்டாளியாக பார்க்கப்படுகிறது. தேவைப்படும் போதெல்லாம், பிராந்தியத்தில் பாதுகாப்பை உறுதி செய்வோம்" என்று திரு ராஜ்நாத் சிங் கூறினார்.

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் இந்திய கடற்படையின் வளர்ந்து வரும் வலிமையை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்று வலியுறுத்திய பாதுகாப்பு அமைச்சர், அவ்வப்போது சுய பரிசோதனையைத் தொடரவும், இன்றைய இக்கட்டான உலகளாவிய சூழ்நிலையில் ஒவ்வொரு சூழ்நிலைக்கும் தயாராக இருக்கவும் தளபதிகளுக்கு அழைப்பு விடுத்தார். பொருளாதாரம், வர்த்தகம், போக்குவரத்து மற்றும் ஒட்டுமொத்த நாட்டு நலனைப் பாதுகாக்க வலுவான கடற்படை திறனின் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

தற்சார்பு நடவடிக்கையாக செயல்படுவதை மையமாகக் கொண்டு, அதன் திறன் மேம்பாட்டிற்காக அதிநவீன கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் போன்றவற்றை சேர்ப்பதன் மூலம் இந்திய கடற்படையை மேலும் சக்திவாய்ந்ததாக மாற்றுவதற்கான பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசின் முயற்சிகளை திரு ராஜ்நாத் சிங் மீண்டும் குறிப்பிட்டார். இந்திய கப்பல் கட்டும் தளங்களில் தற்போது 64 கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள் கட்டுமானத்தில் உள்ளன என்றும், கூடுதலாக 24 தளங்களுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் எடுத்துரைத்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2056628

 

******

IR/RS/KR



(Release ID: 2056687) Visitor Counter : 48