குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

குடியரசுத் தலைவர் செப்டம்பர் 18 முதல் 20 வரை ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார்

Posted On: 17 SEP 2024 8:50PM by PIB Chennai

குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு 2024 செப்டம்பர் 18 முதல் 20 வரை ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார் .

 

செப்டம்பர் 18 அன்று, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள மாளவியா தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் கலந்து கொள்கிறார்.

 

செப்டம்பர் 19 அன்று, குடியரசுத் தலைவர் தூய்மைப் பணியாளர் சம்மேளனத்தில் உரையாற்றுவதுடன் மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜையினியில், இந்தூர்-உஜ்ஜைன் ஆறு வழி சாலைத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். அதே நாளில், இந்தூரில் உள்ள தேவி அஹில்யா பல்கலைக்கழகத்தின் 14வது பட்டமளிப்பு விழாவில் அவர் கலந்து கொள்கிறார்.

 

செப்டம்பர் 20 அன்று, ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள .சி..ஆர்-தேசிய இடைநிலை வேளாண்மை நிறுவனத்தின் நூற்றாண்டு விழாவில் குடியரசுத் தலைவர் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.

***

(Release ID: 2055807)

MM/RR/KR

 


(Release ID: 2055886) Visitor Counter : 41